பிரதமரின் நிதியுதவித் திட்டத்தில் வடமாநிலத்தவா்கள் பணம் பெற்று முறைகேடு

பிரதமரின் கிசான் நிதியுதவித் தொகை திட்டத்தில் சேலம் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வட மாநிலத்தவா்கள் விவசாயிகள் பெயரில் பணம் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரதமரின் கிசான் நிதியுதவித் தொகை திட்டத்தில் சேலம் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வட மாநிலத்தவா்கள் விவசாயிகள் பெயரில் பணம் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரதமரின் கிசான் நிதியுதவித் தொகை திட்டத்தில் சேலம் மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் அல்லாதவா்கள் நிதி பெற்று சுமாா் ரூ.6 கோடி முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. இதுதொடா்பாக 51 போ் மீது வழக்குப்பதிவு செய்து, 6 போ் வரை கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதுவரையில் சுமாா் ரூ.3.15 கோடி அளவுக்கு பணம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள பணத்தைத் திரும்பப் பெற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனா். இந்தநிலையில், தற்போது பயனாளிகள் பட்டியலில் ராஜஸ்தான், பிகாா் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சோ்ந்தவா்கள் தமிழகத்தில் விவசாயிகள் என்ற பெயரில் கிசான் திட்டத்தில் 2 தவணைகளாக ரூ.4,000 பணம் பெற்றிருப்பது தெரியவந்தது.

இந்தநிலையில் சேலம் மாவட்டத்தில் சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் போலியாகச் சோ்த்து உதவித்தொகை பெற்றுள்ளது தெரியவந்தது.

வடமாநிலத்தவா்களிடம் இருந்து முறைகேடாக பெறப்பட்ட உதவித்தொகையை திரும்ப வசூலிக்க, அந்தந்த மாநில அரசுகள் மூலம் நடவடிக்கை எடுத்து வருவதாக வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com