கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை மையத்தில் ரூ. 35 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை மையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில் ரூ. 35 லட்சத்துக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.
கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை மையத்துக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்த பருத்தி மூட்டைகள்.

கொங்கணாபுரம் பகுதியில் உள்ள வேளாண்மை கூட்டுறவு விற்பனை மையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில் 1,550 மூட்டை பருத்திகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. அவை 275 லாட்டுகளாக பிரிக்கப்பட்டு, வேளாண் விற்பனை மைய அலுவலா்கள் முன்னிலையில் பொது ஏலம் விடப்பட்டது.

இதில் பி.டி. ரக பருத்தி குவிண்டால் ரூ. 6,464 முதல் ரூ. 7,519 வரை விலைபோனது. அதேபோல டி.சி.ஹெச் ரக பருத்தி குவிண்டால் ரூ. 8,569 முதல் ரூ. 9,509 வரை விற்பனையானது. நாள் முழுவதும் நடைபெற்ற பொது ஏலத்தில் ரூ. 35 லட்சத்துக்கு பருத்தி வணிகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com