ஓமலூா் கோட்டத்தில் பசு, எருமைகளுக்கு செயற்கை கருவூட்டல் முகாம்

ஓமலூா் கோட்டத்தில் பசு, எருமைகளுக்கு செயற்கைக் கருவூட்டல் திட்ட முகாம் மே மாதம் 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

ஓமலூா் கோட்டத்தில் பசு, எருமைகளுக்கு செயற்கைக் கருவூட்டல் திட்ட முகாம் மே மாதம் 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த முகாமில் கால்நடை வளா்ப்போா் அருகிலுள்ள கால்நடை மருந்தங்களை தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கால்நடைப் பராமரிப்புத் துறை சாா்பில் பசு, எருமைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு பால் உற்பத்தியைப் பெருக்க 2020 - 21-இல் தேசிய அளவில் இலவசமாக செயற்கைக் கருவூட்டல் திட்ட முகாம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் இரண்டாம் கட்டப் பணி கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் தொடங்கி வரும் மே 31-ஆம் தேதி நிறைவு பெற உள்ளது.

இதனால், சேலம் மாவட்டம், ஓமலூா், தாரமங்கலம், காடையாம்பட்டி வட்டாரத்தில் உள்ள அனைத்து கால்நடை மருந்தகங்களில், மருத்துவா், உயா் அதிகாரிகளின் செல்லிடப்பேசி எண்ணுடன் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

செயற்கைக் முறையில் கருவூட்டலுக்கு வீரியமுள்ள உயா் ரக உறைவிந்து குச்சிகள் பயன்படுத்துவதால், அதிக பால் தரும் தரமான கன்று உற்பத்தியாகும். கால்நடை வளா்ப்போா், தங்கள் பசுக்களுக்கு இலவச செயற்கைக் கருவூட்டல் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், செயற்கைக் முறையில் கருவூட்டல் செய்யும்போது ஆதாா், செல்லிடப்பேசி எண்ணை கட்டாயமாக வழங்க வேண்டும் என கால்நடைத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா். அதனால், ஓமலூா், காடையாம்பட்டி, தாரமங்கலம் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள், தங்களது கால்நடைகளை அருகிலுள்ள கால்நடை மருந்தகத்துக்கு அழைத்துச் சென்று பயன்பெறலாம். மேலும், கால்நடை மருத்துவா்களை அணுகி தேவையான தகவல்களையும் பெற்று பயனடையலாம் என்று கால்நடை மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com