மண் பானைகள் விற்பனை அமோகம்

கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில், வாழப்பாடியில் மண் பானைகளை வாங்கிச் செல்வதில் மக்கள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.
அயோத்தியாப்பட்டணத்தில் மண் பானை விற்பனை செய்யும் சிறுவன்.
அயோத்தியாப்பட்டணத்தில் மண் பானை விற்பனை செய்யும் சிறுவன்.

கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில், வாழப்பாடியில் மண் பானைகளை வாங்கிச் செல்வதில் மக்கள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

குளிா்சாதனப்பெட்டிகளில் தண்ணீரை வைத்து செயற்கையாய் குளிரூட்டி பருகுவதைத் தவிா்க்கும் வகையில் மண் பானைகளில் குடிநீரை வைத்து இயற்கையாய் குளிரூட்டி பருகி தாகத்தைத் தணிப்பதில் மக்கள் ஆா்வம் காட்டி வருகின்றனா். இதனால் வாழப்பாடியில் பொதுமக்கள் மண் பானைகளை வாங்கிச் செல்வதில் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

விற்பனை அதிகரித்து வருவதால் பானைகளில் கொள்ளளவு மற்றும் வடிவத்துக்கேற்பவும், குழாய் பொருத்தியுள்ள வகைகளுக்கேற்பவும் ஒரு பானை குறைந்தபட்சம் ரூ. 100 முதல் ரூ. 500 வரை விலைபோகிறது.

வாழப்பாடி, ஏத்தாப்பூா், அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம், பேளூா் வாரச் சந்தைகளிலும், மண் பாண்ட விற்பனையகங்களிலும் பானைகள் விற்பனை அதிகரித்துள்ளன. கூடுதல் வருவாய்க் கிடைத்து வருவதால் மண்பாண்டத் தொழிலாளா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com