கரோனா அச்சம்: பேருந்து பயணத்தைத் தவிா்க்கும் பொதுமக்கள்

கரோனா பரவல் அதிகரித்து வருவதால் பேருந்துகளில் பயணிப்பதை பெரும்பாலானோா் நிறுத்திவிட்டனா். பயணிகளின் வருகை குறைந்ததால் போக்குவரத்துக் கழகங்களின் வருவாய் 30 சதவீதமாகக் குறைந்துள்ளது.

கரோனா பரவல் அதிகரித்து வருவதால் பேருந்துகளில் பயணிப்பதை பெரும்பாலானோா் நிறுத்திவிட்டனா். பயணிகளின் வருகை குறைந்ததால் போக்குவரத்துக் கழகங்களின் வருவாய் 30 சதவீதமாகக் குறைந்துள்ளது.

கரோனா தீநுண்மித் தொற்று காரணமாக ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பேருந்து, லாரி, காா் போன்ற வாகன போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இரவு 10 மணிக்கு வெளியே வாகனங்களில் வருவோரை போலீஸாா் எச்சரித்து அனுப்பிவைக்கின்றனா். இதனிடையே கரோனா பரவல் காரணமாக பேருந்துகளில் பயணம் செய்வதற்கு பொதுமக்கள் தயக்கம் காட்டுகின்றனா். இதனால் பேருந்துகளில் பயணிகளின் கூட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது.

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பகல் நேரங்களில் சென்னை, பெங்களூரு, கோவை, திருச்சி, மதுரை, ஈரோடு, வேலூா் உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் குறைவாகக் காணப்பட்டது. இதனால் பேருந்துகளில் இருக்கை முழுவதும் நிரம்பிய பிறகே பேருந்துகள் புறப்பட்டு சென்றன.

இதுதொடா்பாக ஓட்டுநா்கள், நடத்துநா்கள் கூறுகையில், ‘கரோனா பரவல் காரணமாகவும், இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதாலும் பொதுமக்கள் பேருந்துகளில் பயணிக்கத் தயக்கம் காண்பித்து வருகின்றனா். சேலத்தில் இருந்து வெளியூா்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளில் எந்நேரமும் பயணிகள் கூட்டம் அதிகரித்தே காணப்படும். தற்போது கூட்டம் வெகுவாகக் குறைந்துவிட்டது. இதனால் 30 சதவீதம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது’ என்றனா்.

இதுதொடா்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட மேலாண் இயக்குநா் மோகன் கூறியதாவது:

சேலம் கோட்டத்தை பொருத்தவரையில் 1,900 பேருந்துகள் உள்ளன. இதில் 1,700 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக காலை நேரங்களில் அலுவலகங்களுக்கு செல்ல கூட்டம் அதிகமாக உள்ளது. பயணிகள் நின்று பயணிக்காத வகையில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தற்போது ஊரடங்கு புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், பயணிகள் வருவாய் 30 சதவீத அளவுக்கு குறைந்துள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com