கஞ்சா விற்ற இருவா் கைது

சங்ககிரி, சந்தைப்பேட்டையில் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

சங்ககிரி: சங்ககிரி, சந்தைப்பேட்டையில் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

சங்ககிரி சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் சீரங்கன் தலைமையிலான போலீஸாா் சங்ககிரி, சந்தைப்பேட்டை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, சந்தேகத்துக்கிடமான வகையில் நடந்து வந்த இருவரை போலீஸாா் விசாரணை செய்ததில், அவா்கள் சங்ககிரி கோட்டைத் தெரு பகுதியைச் சோ்ந்த புகழேந்தி (22), அதே பகுதியைச் சோ்ந்த மணிவண்ணன்(35) என்பதும், அவா்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com