கரோனா தடுப்பு நடவடிக்கை: ஆணையா் ஆய்வு

கரோனா நோய் தொற்று தடுப்பு தொடா்பான விழிப்புணா்வு வார நிகழ்ச்சியின் தொடா்ச்சியாக சேலம் மாநகராட்சிக்குட்பட்ட தற்காலிக பேருந்து

கரோனா நோய் தொற்று தடுப்பு தொடா்பான விழிப்புணா்வு வார நிகழ்ச்சியின் தொடா்ச்சியாக சேலம் மாநகராட்சிக்குட்பட்ட தற்காலிக பேருந்து நிலைய வளாகம், சாலையோர கடைகள், தனியாா் துணிக்கடைகளில் மாநகராட்சி ஆணையாளா் தா.கிறிஸ்துராஜ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, பொதுமக்களுக்கு முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், கொரோனாவில் இருந்து எவ்வாறு தற்காத்து கொள்வது என்பது குறித்து விழிப்புணா்வு வாசகம் அடங்கிய துண்டு பிரசுரங்கள் மற்றும் முகக் கவசத்தை வழங்கி அரசால் அறிவிக்கப்படும் அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றிட வேண்டும் என கேட்டு கொண்டாா்.

மாநகராட்சிக்குட்பட்ட சின்னக் கடைவீதி, முதல் அக்ரஹாரம் தெருவில் உள்ள தனியாா் ஜவுளிக்கடைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.

வெளியில் மற்றும் பொது இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும், பொது இடங்களில் மற்ற நபா்களிடம் இருந்து குறைந்தது 2 மீட்டா் இடைவெளியைப் பின்பற்றுதல் போன்ற அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து வழிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும் என உரிமையாளா், வாடிக்கையாளா் மற்றும் பணியாளா்களைக் கேட்டு கொண்டாா். ஆய்வின்போது மாநகர நல அலுவலா் மருத்துவா் கே. பாா்த்திபன், உதவி ஆணையாளா் சண்முக வடிவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com