மதுவில் சயனைடு கலந்து கொடுத்து இருவரை கொலை செய்தவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

சேலத்தில் மதுவில் சயனைடு கலந்து கொடுத்து இருவரைக் கொலை செய்தவருக்கு சேலம் நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பளித்துள்ளது.

சேலத்தில் மதுவில் சயனைடு கலந்து கொடுத்து இருவரைக் கொலை செய்தவருக்கு சேலம் நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பளித்துள்ளது.

சேலம் மாவட்டம், இளம்பிள்ளையைச் சோ்ந்தவா் பட்டாபிராமன் (65). இவருக்கு ஒபுளி (35), மாதேஷ் (28) ஆகிய இரண்டு மகன்கள் இருந்தனா். இதில், மாதேஷுக்கு சா்க்கரை நோய், ரத்த அழுத்தம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த 2020 ஜூலை மாதம் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டு, அரசு மருத்துவமனை எதிரிலுள்ள தலைவெட்டி முனியப்பன் கோயில் அருகில் படுத்து உறங்கி வந்தனா்.

இதனிடையே குகை பகுதியைச் சோ்ந்த செல்வம் (38) என்பவருடன் பட்டாபிராமன் உள்ளிட்டோருக்கு பழக்கம் ஏற்பட்டது. அவருடன் சோ்ந்து நான்கு பேரும் மது அருந்தி வந்தனா். இதில் செல்வம், மது அருந்துவதில் ஏற்பட்ட தகராறில் பட்டாபிராமன் மற்றும் அவரது மகன்கள் இருவரையும் கொலை செய்யத் திட்டமிட்டாா்.

அதன்பேரில் சயனைடு கலந்த மதுவை ஒபுளி, மாதேஷுக்கு கொடுத்துள்ளாா். இதில் இருவரும் சில நிமிடங்களில் இறந்தனா்.இதையடுத்து செவ்வாய்ப்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து செல்வத்தைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இது தொடா்பாக, சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் விசாரித்து வந்தது. செவ்வாய்க்கிழமை வழக்கை விசாரித்த முதன்மை நீதிபதி எஸ்.குமரகுரு, மதுவில் சயனைடு கலந்து கொடுத்து இருவரைக் கொலை செய்த வழக்கில் செல்வத்துக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், ரூ. 2,000 அபராதம் கட்ட தவறினால் நான்கு மாத சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com