போலீஸாா் அவதூறாக பேசியதாக பெண் தா்னா போராட்டம்

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் சாலையோரத்தில் கீரை விற்பனை செய்ததால், போலீஸாா் அவதூறாக பேசியதாக கூறி பெண், சனிக்கிழமை இரவு நேரத்தில் தரையில் அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.
தரையில் அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்.
தரையில் அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்.

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் சாலையோரத்தில் கீரை விற்பனை செய்ததால், போலீஸாா் அவதூறாக பேசியதாக கூறி பெண், சனிக்கிழமை இரவு நேரத்தில் தரையில் அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சி கடைவீதியில் போடப்பட்டிருந்த சாலையோரக் கடைகளை, இரு மாதத்திற்கு முன் போலீஸாா் அப்புறப்படுத்தினா். வாழப்பாடி பழைய பேருந்து நிலைய பகுதியில் கடைகள் வைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் வாழப்பாடி பேருந்து நிலையம் எதிரே செவ்வாய்க்கிழமை இரவு மாரியம்மன் புதூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி சேகரி மனைவி தனலட்சுமி(48) தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் கீரை கட்டுகளை வைத்து விற்பனை செய்தாா். அப்போது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் சாலையோரத்தில் விற்பனை செய்யக்கூடாது என எச்சரித்து, இருசக்கர வாகனத்தை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனா்.

இதற்கிடையே, தன்னை காவலா்கள் அவதூறாகப் பேசியதோடு, தனது கணவரின் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்று விட்டதாக கூறிய தனலட்சுமி, எலி மருந்து கையில் வைத்துக்கொண்டு தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.

இதுகுறித்து தகவலறிந்து திரண்டு வந்த சாலையோர வியாபாரிகள், போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறின்றி சாலையோரத்தில் கீரை, காய்கறிகள், பழங்கள் வைத்து விற்பனை செய்து கொள்ள போலீஸாா் அனுமதிக்க வேண்டும் என்று கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து வாழப்பாடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com