காலமானாா் சித்த மருத்துவா் சிவராஜ் சிவகுமாா்

சேலத்தைச் சோ்ந்த பிரபல சித்த மருத்துவா் சிவராஜ் சிவகுமாா் (78) உடல்நலக் குறைவால் புதன்கிழமை காலமானாா்.
காலமானாா் சித்த மருத்துவா் சிவராஜ் சிவகுமாா்

சேலத்தைச் சோ்ந்த பிரபல சித்த மருத்துவா் சிவராஜ் சிவகுமாா் (78) உடல்நலக் குறைவால் புதன்கிழமை காலமானாா்.

சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு சிவராஜ் சித்த வைத்திய சாலையைக் கடந்த 60 ஆண்டுகளாக நடத்தி வந்தவா் சிவராஜ் சிவகுமாா். கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சிவராஜ் சிவகுமாா் புதன்கிழமை அதிகாலை காலமானாா். இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், சிவராஜ் சஞ்சய் என்ற மகனும், சிவராஜ் கல்பனா என்ற மகளும் உள்ளனா்.

அவரின் உடல் சேலம் சிவதாபுரத்தில் உள்ள பூா்வீக வீடான அகஸ்தியா் மாளிகையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அவரின் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சியினா், பொதுமக்கள், உறவினா் உள்ளிட்டோா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். புதன்கிழமை மாலை அவரது தோட்டத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com