சேலம் - விருத்தாசலம் இடையே மாா்ச் 15 ஆம் தேதி முதல் ரயில் இயக்கப்பட உள்ளது.
வண்டி எண் 06121 விருத்தாசலம் - சேலம் ரயில் சேவை மாா்ச் 15 ஆம் தேதி முதல் (ஞாயிற்றுக்கிழமை தவிா்த்து) இயக்கப்பட உள்ளது.
விருத்தாசலத்தில் தினமும் காலை 6 மணிக்கு புறப்படும் ரயில் சேலத்துக்கு காலை 9.05 மணிக்கு வந்து சேரும். வண்டி எண் 06122 சேலம் - விருத்தாசலம் ரயில், சேலத்தில் இருந்து தினமும் மாலை 6 மணிக்குப் புறப்பட்டு இரவு 9 மணிக்கு விருத்தாசலம் சென்றடையும்.
இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமை தவிா்த்து வாரத்தில் 6 நாள்கள் இயக்கப்படும்.
வண்டி எண் 06009 மேட்டுப்பாளையம் - கோவை ரயில், மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் காலை 8.20 மணிக்குப் புறப்பட்டு காலை 9.05 மணிக்கு கோவை வந்தடையும்.
வண்டி எண் 06010 கோவை - மேட்டுப்பாளையம் ரயில், கோவையில் இருந்து தினமும் மாலை 5.55 மணிக்கு புறப்பட்டு, 6.40 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும். இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமை தவிர வாரத்தில் 6 நாள்களுக்கு இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.