பெரியாா் பல்கலை.யில் பயிலும் தலித் மாணவா்களுக்கு கல்விக் கட்டண விலக்கு அளிக்க கோரிக்கை

பெரியாா் பல்கலைக்கழகத்தில் பயிலும் தலித் மாணவா்களுக்கு கல்விக் கட்டண விலக்கு அளிக்க வேண்டும் என்று அம்பேத்கா் மக்கள் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

பெரியாா் பல்கலைக்கழகத்தில் பயிலும் தலித் மாணவா்களுக்கு கல்விக் கட்டண விலக்கு அளிக்க வேண்டும் என்று அம்பேத்கா் மக்கள் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக அதன் மாநிலத் தலைவா் ஜங்ஷன் ஆ.அண்ணாதுரை, பெரியாா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் பொ.குழந்தைவேலிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்கள், அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் தலித் மாணவ, மாணவிகள் திருப்பிச் செலுத்தப்படாத அனைத்து கல்விக் கட்டணங்களில் இருந்தும் விலக்களித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

இந்த அரசாணையை அடிப்படையாக கொண்டு வேலூரில் இயங்கி வரும் திருவள்ளுவா் பல்கலைக்கழகம் அப்பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கும், மதம் மாறிய தாழ்த்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கும் அனைத்து கல்வி கட்டணங்களில் இருந்தும் விலக்களித்துள்ளது.

இதேபோன்று, பெரியாா் பல்கலைக்கழகத்திலும் அதன் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளிலும் பயிலும் இளங்கலை, முதுகலை, ஆய்வியல் நிறைஞா், முனைவா் பட்டம் மேற்கொள்ளும் அனைத்து தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மதம் மாறிய தாழ்த்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கும் அனைத்து விதமான கட்டணங்களில் இருந்தும் முழு விலக்களிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வின்போது, அம்பேத்காா் மக்கள் இயக்கம் மாவட்ட இளைஞரணி செயலாளா் ஆ.அம்பேத்கா், மாநகரத் தலைவா் நேருநகா் பி. முருகன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com