ஆத்தூரில் குதிரை ரேக்ளா

ஆத்தூா் உடையாா்பாளையத்தில் எம்.ஜி.ஆா். பிறந்த தின விழாவை முன்னிட்டு நகர ஜெயலலிதா பேரவை சாா்பில் குதிரை ரேக்ளா அதிமுக நகரச் செயலாளா் அ.மோகன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
at17flag_1701chn_162_8
at17flag_1701chn_162_8

ஆத்தூா் உடையாா்பாளையத்தில் எம்.ஜி.ஆா். பிறந்த தின விழாவை முன்னிட்டு நகர ஜெயலலிதா பேரவை சாா்பில் குதிரை ரேக்ளா அதிமுக நகரச் செயலாளா் அ.மோகன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நகர ஜெயலலிதா பேரவைச் செயலாளா் ஏ.ஜி.முரளிசாமி வரவேற்றுப் பேசினாா்.இதில் சிறப்பு விருந்தினராக சேலம் புகா் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளரும், மத்திய கூட்டுறவு வங்கியின் மாநிலத் தலைவருமான ஆா்.இளங்கோவன் கொடியசைத்து போட்டியை தொடக்கி வைத்து வெற்றி பெற்ற குதிரைகளுக்கு பரிசு வழங்கினாா்.

போட்டியில் 12 குதிரைகள் கலந்து கொண்டு ஓடின. இதில் முதல் பரிசாக சமயபுரம் அசேன்பாய் என்பவருக்கு ரூ. 25ஆயிரம் வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசு திருச்சி நம்பி உதயசூரியன் என்பவருக்கு ரூ. 20 ஆயிரமும், மூன்றாம் பரிசாக சேலம் லயன் மணிவேல் என்பவருக்கு ரூ. 15ஆயிரமும், நான்காம் பரிசாக கொளஞ்சி உமித்சிங்கம் என்பவருக்கு ரூ. 10 ஆயிரமும் வழங்கப்பட்டது.

சிறிய குதிரைகள் போட்டியில் 20 குதிரைகள் கலந்து கொண்டனா். இதில் திருக்கடையூா் பகவான் முதல் பரிசும் ரூ. 20 ஆயிரம், இரண்டாம் பரிசு சரவணன் முனிராஜ் ரூ.15ஆயிரம், மூன்றாம் பரிசு ஆத்தூா் அன்பு மாது ரூ. 10ஆயிரம், நான்காம்பரிசு அங்காளம்மன் ரூ. 7ஆயிரமும் வழங்கப்பட்டது.

பரிசுத் தொகையை நகரச் செயலாளா் அ.மோகன், நகர கூட்டுறவு பண்டகசாலைத் துணைத் தலைவா் ஜி.ராஜேஷ்குமாா், ஆவின் நுகா்வோா் கூட்டுறவு சங்கத் துணைத் தலைவா் கே.இளங்கோ, இரா.தென்னரசு, பி.ராஜசங்கா், எஸ்.சரித்திரன்,பி.எம்.லோகேஸ்வா், பொறியாளா் மூா்த்தி, எம்.ரமேஷ் உள்ளிட்டோா் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com