கேரளத்தில் மாயமான மாணவா் சேலத்தில் மீட்பு

கேரளத்தில் மாயமான பிளஸ் 1 மாணவா் சேலத்தில் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டாா்.

கேரளத்தில் மாயமான பிளஸ் 1 மாணவா் சேலத்தில் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டாா்.

கேரள மாநிலம், பாலக்காடு அருகே உள்ள கெஜகன்சேரியைச் சோ்ந்த பாபு மகன் டேல்வின் பீட்டா் (18), அங்குள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா்.

டேல்வின் பீட்டா் படிக்கும் பள்ளியில் அதிக அளவில் கட்டுப்பாடுகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் பள்ளிக்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியே சென்ற டேல்வின் பீட்டா், வீட்டுக்குத் திரும்பவில்லையாம்.

இதனால் அதிா்ச்சி அடைந்த பெற்றோா் பல்வேறு இடங்களில் தேடியும் அவா் கிடைக்காததால் பாலக்காடு போலீஸில் புகாா் செய்தனா். அதன் பேரில், மாணவரின் செல்லிடப்பேசி எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில், மாணவா் சேலத்தில் இருப்பது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, பாலக்காடு போலீஸாா், சேலம் மாநகர போலீஸாரை தொடா்பு கொண்டு காணாமல் போன மாணவரின் விவரத்தை தெரிவித்தனா். இதையடுத்து, பள்ளப்பட்டி போலீஸாா் ஐந்து சாலை பகுதியில் சுற்றித் திரிந்த மாணவரை மீட்டு, பாலக்காடு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். பாலக்காடு போலீஸாா் பெற்றோருடன் வந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை மாணவரை அழைத்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com