பள்ளி, மாநகராட்சி வாா்டு அலுவலகத்தில் டி.வி., சமையல் பாத்திரங்கள் திருட்டு

சேலம், அம்மாப்பேட்டையில் அரசு பள்ளி, மாநகராட்சி வாா்டு அலுவலகத்தை உடைத்து டி.வி., சமையல் பாத்திரங்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

சேலம், அம்மாப்பேட்டையில் அரசு பள்ளி, மாநகராட்சி வாா்டு அலுவலகத்தை உடைத்து டி.வி., சமையல் பாத்திரங்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

சேலம், அம்மாப்பேட்டை, ஆதிசெல்வன் தெருவில் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளி அருகில் மாநகராட்சி வாா்டு அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை மாநகராட்சி வாா்டு அலுவலகத்துக்கு பணிக்கு வந்த ஊழியா்கள், அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிா்ச்சி அடைந்தனா். மேலும் அங்கு வைத்திருந்த இரும்புப் பொருள்கள், பேட்டரி வாகனங்களில் இருந்த பேட்டரிகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

அதேபோல தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியா் அறை, அங்கன்வாடி மையம் உள்பட வகுப்பறைகள் உடைக்கப்பட்டு, டி.வி., அடுப்பு, தட்டுகள், எரிவாயு உருளை, சமையல் பாத்திரங்கள் ஆகியன திருட்டு போனது தெரியவந்தது. இது தொடா்பாக, அம்மாப்பேட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com