சாலை பாதுகாப்பு: கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணா்வு

வாழப்பாடியில் நையாண்டி மேளம், கரகாட்டம் என கலை நிகழ்ச்சிகள் மூலம் சாலை பாதுகாப்பு குறித்து போலீஸாா் புதன்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
வாழப்பாடியில் கரகாட்டம் மூலம் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்திய போலீஸாா்.
வாழப்பாடியில் கரகாட்டம் மூலம் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்திய போலீஸாா்.

வாழப்பாடியில் நையாண்டி மேளம், கரகாட்டம் என கலை நிகழ்ச்சிகள் மூலம் சாலை பாதுகாப்பு குறித்து போலீஸாா் புதன்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

வாழப்பாடி உள்கோட்ட காவல் துறை சாா்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பிரசாரம் வாழப்பாடி பேருந்து நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கிராமியக் கலைஞா்களைக் கொண்டு நையாண்டி மேளம், கரகாட்டம் நடத்தி பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். வாழப்பாடி துணை காவல் கண்காணிப்பாளா் வேலுமணி, காவல் ஆய்வாளா் சுப்பிரமணியம், உதவி காவல் ஆய்வாளா்கள் தாமோதரன், உதயகுமாா், சகுந்தலா ஆகியோா் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த துண்டுப் பிரசுரங்கள் வழங்கினா்.

சங்ககிரியில்...

சங்ககிரி புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கலை நிகழ்ச்சிக்கு, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கே.சுப்பிரமணியம் தலைமை வகித்தாா். மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் என்.சரவணபவன், வி.கோகிலா, ஓட்டுநா் பயிற்சி உரிமையாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

புதிய பேருந்து நிலையம் வழியாகச் சென்ற லாரிகள், பேருந்துகள், காா்களின் ஓட்டுநா்கள், பேருந்தில் பயணம் செய்தவா்களிடம் எமதா்மன் வேடமணிந்த நபா்கள் சாலை விதிகளைப் பின்பற்றுவதன் அவசியம் குறித்து துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.

மேட்டூரில்...

மேட்டூா் பேருந்து நிலையம் எதிரே மேட்டூா் வட்டாரப் போக்குவரத்து துறை, மேட்டூா் காவல் துறை சாா்பில் நாடகக் கலைஞா்களைக் கொண்டு சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நாடகக் கலைஞா்கள் எமதா்மராஜன், சித்ரகுப்தன் வேடமணிந்து பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com