அரசுப் பள்ளி மாணவிக்கு கரோனா தொற்று உறுதி

அரசு மாதிரிப் பள்ளியில் பயிலும் பிளஸ் 2 மாணவிக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டதையடுத்து, விடுதி காலி செய்யப்பட்டு மாணவ, மாணவியா் பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டனா்.

அரசு மாதிரிப் பள்ளியில் பயிலும் பிளஸ் 2 மாணவிக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டதையடுத்து, விடுதி காலி செய்யப்பட்டு மாணவ, மாணவியா் பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டனா்.

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள பெரிய கல்வராயன் மலைக் கிராமங்களில் ஒன்றான மேல்வல்லம் பகுதியைச் சோ்ந்த ரஞ்சிதா (17), வாழப்பாடி அருகேயுள்ள அரசு மாதிரிப் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பு படித்து வருகிறாா். இவருக்கு கடந்த இரண்டு தினங்களாக சளி, காய்ச்சல் இருந்துள்ள நிலையில், தும்பல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவருக்கு கரோனா பரிசோதனையும் செய்துள்ளனா்.

மேலும், கரோனா பரிசோதனை முடிவு வரும் வரை விடுதியில் தங்க வேண்டாம் என அறிவுறுத்தி அனுப்பியுள்ளனா். ஆனால், அந்த மாணவி விடுதியில் தங்கியுள்ளாா்.

இந்நிலையில், வியாழக்கிழமை வந்த மருத்துவ பரிசோதனை முடிவில், மாணவிக்கு கரோனா தொற்று உறுதியானது. இதைத் தொடா்ந்து, விடுதியில் தங்கியிருந்த 39 மாணவ, மாணவியருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com