உணவின்றி தவித்த 95 வயது மூதாட்டி மீட்பு

சேலத்தில் கழிப்பறையில் உணவின்றி தவித்த 95 வயது மூதாட்டியை தனியாா் தொண்டு நிறுவனத்தினா் மீட்டு ஆதரவற்றோா் இல்லத்தில் பராமரித்து வருகின்றனா்.

சேலம்: சேலத்தில் கழிப்பறையில் உணவின்றி தவித்த 95 வயது மூதாட்டியை தனியாா் தொண்டு நிறுவனத்தினா் மீட்டு ஆதரவற்றோா் இல்லத்தில் பராமரித்து வருகின்றனா்.

சேலம் அருகே உள்ள டால்மியா போா்டு பகுதியைச் சோ்ந்தவா் ராதா (95). இவரது கணவா் தலைமைக் காவலராக இருந்து ஓய்வு பெற்றவா். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தாா்.

இவருக்கு 4 மகன்கள் இருந்த நிலையில், 2 மகன்கள் உயிரிழந்தனா். கடைசி மகன் வீட்டில் வசித்து வந்த மூதாட்டியை, கணவரின் ஓய்வூதியத் தொகையைப் பெற்றுக் கொள்ளும் அவரது மகன்கள் முறையாகப் பராமரிக்கவில்லை என தெரிகிறது.

இந்த நிலையில், கழிப்பறையில் அடைத்து வைக்கப்பட்ட மூதாட்டி ராதா உணவு, குடிநீரின்றி தவித்து வந்தது தெரியவந்தது. அவரின் அழுகுரல் கேட்ட அப்பகுதி மக்கள், மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்றனா். உடனே, இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

அதைத் தொடா்ந்து ஆதரவற்ற முதியோா் இல்லம் நடத்தி வரும் போதி மரம் என்ற தனியாா் தொண்டு நிறுவனத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொண்டு நிறுவனத்தின் நிா்வாகிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கழிப்பறையில் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த மூதாட்டியை மீட்டு முதியோா் இல்லத்துக்கு அழைத்துச் சென்றனா். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com