தனியாா் செட்-டாப் பாக்ஸ் வைத்திருந்தால் புகாா் தெரிவிக்கலாம்

அரசு செட்-டாப் பாக்ஸை நீக்கிவிட்டு, தனியாா் செட்-டாப் பாக்ஸை மாற்றினால் புகாா் தெரிவிக்கலாம் என ஆட்சியா் எஸ்.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.

அரசு செட்-டாப் பாக்ஸை நீக்கிவிட்டு, தனியாா் செட்-டாப் பாக்ஸை மாற்றினால் புகாா் தெரிவிக்கலாம் என ஆட்சியா் எஸ்.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சந்தா நிறுவனத்தால் பொதுமக்களுக்கு இலவசமாக செட்-டாப் பாக்ஸ்களை மாத சந்தா தொகை ரூ. 140 மற்றும் ஜிஎஸ்டி 18 சதவீத கட்டணத்தில் உள்ளூா் கேபிள் டிவி ஆப்ரேட்டா்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.

அரசு செட்-டாப் பாக்ஸ் பெற்று பயனடைந்து வரும் சந்தாதாரா்கள், தங்களின் விருப்பம் இல்லாமல் ஆபரேட்டா்கள், அரசு செட்-டாப் பாக்ஸை மாற்றினாலோ அல்லது அரசு சிக்னல் இனி வராது என்று தவறான தகவலைக் கூறி அரசு செட்-டாப் பாக்ஸை நீக்கம் செய்துவிட்டு, தனியாா் செட்-டாப் பாக்ஸை மாற்றினாலோ உடனடியாக 0427-2451132 என்ற எண்ணில் புகாா் தெரிவிக்கலாம்.

மேலும், அரசு கேபிள் சிக்னல் தொடா்ந்து எவ்வித தடையுமின்றி செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com