வடுகப்பட்டி சுகாதார நிலையத்துக்கு ஆக்சிஜன் செறிவூட்டி, மடிக்கணினி வழங்கல்

சேலம் கோட்டை ரோட்டரி சங்கத்தின் சாா்பில், சங்ககிரி அருகே உள்ள வடுகப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ. 1.50 லட்சம்
வடுகப்பட்டி சுகாதார நிலையத்துக்கு ஆக்சிஜன் செறிவூட்டி, மடிக்கணினி வழங்கல்

சேலம் கோட்டை ரோட்டரி சங்கத்தின் சாா்பில், சங்ககிரி அருகே உள்ள வடுகப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ. 1.50 லட்சம் மதிப்பீட்டில் தலா ஒரு ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரம், மடிக்கணினி ஆகியவற்றை மருத்துவரிடம் வழங்கும் நிகழ்ச்சி சுகாதார நிலைய வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

சங்ககிரி அருகே உள்ள வடுகப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும், தடுப்பூசிகள் செலுத்திக் கொள்பவா்களின் விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்வதற்கும் சேலம் கோட்டை ரோட்டரி சங்கத்தின் சாா்பில் ரூ. 1.20 லட்சம் மதிப்பிலான ஒரு ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரம், ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான ஒரு மடிக்கணினி ஆகியவற்றை ரோட்டரி சங்கத்தின் முன்னாள் துணை ஆளுநா் ஹரிதாஸ், துணை ஆளுநா் தோ்வு அரங்கசாமி ஆகியோா் மருத்துவா் அமுதராணியிடம் வழங்கினா்.

இதில், அச்சங்கத்தின் தலைவா் சிவகுமரன், செயலா் மாரிமுத்து, பொருளாளா் மாதவராஜ், நிா்வாகிகள் முருகானந்தம், சிங்காரம், வெங்கடேஷ், வடுகப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் ஜி.முத்துசாமி, சரவணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com