சங்ககிரியில் சுற்றுலா கார், வேன் ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை மனு

சங்ககிரியில் சுற்றுலா கார், வேன் ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் சங்கத்தினர் டிஎஸ்பியிடம் கோரிக்கை மனு அளித்தனர். 
சங்ககிரி துணைகாவல்கண்காணிப்பாளரிடம் மனு அளிக்க வந்த வாகன உரிமையாளர்கள்.
சங்ககிரி துணைகாவல்கண்காணிப்பாளரிடம் மனு அளிக்க வந்த வாகன உரிமையாளர்கள்.

சங்ககிரி நகர சுற்றுலா கார், வேன் ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் பல ஆண்டுகளாக வாகனங்கள் நிறுத்தும் இடத்தினை மாற்றம் செய்யாமல் அதேயிடத்தில் வாகனங்களை நிறுத்த அனுமதி கோரி சங்ககிரி துணைகாவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர். 

சேலம் மாவட்டம், சங்ககிரி நகர சுற்றுலா கார், வேன் ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் கே.கார்த்திகேயன், டி.சங்கர் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் சங்ககிரி துணைகாவல் கண்காணிப்பாளரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:-

சங்ககிரியில் திருச்செங்கோடு சாலை பகுதியில் கடந்த சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக வாகனங்களை நிறுத்தி தொழில் செய்து வருகிறோம். இந்நிலையில் பிப்ரவரி 24ம் தேதி சங்ககிரி காவல் ஆய்வாளர் எங்களை அழைத்து வாகனங்களை நிறுத்தக்கூடாது என்று கூறியுள்ளார்.

நாங்கள் இத்தொழிலை நம்பி சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பிழைத்து வருகிறோம். எனவே நாங்கள் தற்போது உள்ள இடத்திலேயே வாகனங்களை நிறுத்தி தொழில் செய்ய ஆவண செய்ய வேண்டுமென அதில் கூறியுள்ளனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com