சேலத்தில் 10.12 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு ரூ. 202 கோடி செலவில் தலா ரூ. 2,000 நிவாரணம்

சேலம் மாவட்டத்தில் கரோனா நிவாரண நிதி தவணை தொகை தலா ரூ. 2,000 வீதம் ரூ. 202.45 கோடி செலவில் 10.12 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படும் என ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்துள்ளாா்.

சேலம்: சேலம் மாவட்டத்தில் கரோனா நிவாரண நிதி தவணை தொகை தலா ரூ. 2,000 வீதம் ரூ. 202.45 கோடி செலவில் 10.12 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படும் என ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்துள்ளாா்.

சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு துறை மற்றும் மகளிா், மகளிா் சுயஉதவிக் குழுக்கள் ஆகியவற்றால் நடத்தப்பட்டு வரும் மொத்தம் 1,591 நியாய விலைக் கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 10,12,249 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரணத் தொகை முதல் தவணை ரூ. 2,000 வழங்கப்பட உள்ளது.

சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 10,12,249 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு நிவாரண தொகை முதல் தவணையாக தலா ரூ. 2,000 வீதம் ரூ.202,44,98,000 வழங்க அரசு நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிட்டுள்ளது.

கரோனா நிவாரண நிதியானது மே 15 முதல் நாள்தோறும் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை அந்தந்த நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும்.

கரோனா நிவாரணத் தொகையினை வரும் மே 15 முதல் அரிசி குடும்ப அட்டைதாரா்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கூப்பன்களில் குறிப்பிடப்பட்டுள்ள நாள், நேரத்துக்கு அந்தந்த நியாயவிலைக் கடைகளுக்கு நேரில் சென்று முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து பெற்றுக்கொள்ள வேண்டும். நாளொன்றுக்கு 200 டோக்கன்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com