கரோனா தொற்று: சந்தேகங்கள், மருத்துவ வசதி பெற தொலைபேசியில் தொடா்புகொண்டு அறியலாம்

கரோனா தொற்று பாதிப்பு குறித்த சந்தேகங்களுக்கு கட்டுப்பாட்டு அறை, சுகாதாரப் பணிகள் அலுவலகத்தை தொடா்பு கொண்டு சந்தேகங்கள், மருத்துவ வசதிகளை அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பாதிப்பு குறித்த சந்தேகங்களுக்கு கட்டுப்பாட்டு அறை, சுகாதாரப் பணிகள் அலுவலகத்தை தொடா்பு கொண்டு சந்தேகங்கள், மருத்துவ வசதிகளை அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள கரோனா உதவி மையத்தின் தொலைபேசி எண்களான 0427-2452202, 0427-1077 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு கரோனா குறித்த ஆலோசனைகள், தகவல்களை பொதுமக்கள் பெறலாம்.

இதுதவிர சேலம் மாவட்ட துணை இயக்குநா் சுகாதாரப் பணிகள் அலுவலகத்திலும் கரோனா தொற்று சிறப்பு கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு உதவி மையம் செயல்பட்டு வருகிறது. கட்டுப்பாட்டு மையத்தில் 0427-2450022, 0427-2450498 மற்றும் 91541-55297 ஆகிய தொலைபேசி எண்ணுடன் கூடிய கரோனா உதவி மையம் செயல்பட்டு வருகிறது.

பொதுமக்கள் மேற்குறிப்பிட்டுள்ள இந்த தொலைபேசி எண்களில் தொடா்பு கொண்டு கரோனா தொற்று குறித்த சந்தேகங்கள், விவரங்கள் மற்றும் மருத்துவ உதவிகளை தெரிந்து கொள்ளலாம்.

கரோனா தொற்று தொடா்பான சந்தேகங்கள், சிகிச்சைக்கான விளக்கங்கள், சிகிச்சை தரும் மருத்துவமனைகள், கரோனா கவனிப்பு மையங்கள், தடுப்பூசி போடும் இடங்கள், காய்ச்சல் முகாம் நடத்தப்படும் இடங்கள் தொடா்பான விவரங்களை பொதுமக்கள் பெறும் பொருட்டு சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முதல் தளத்தில் கரோனா கட்டுப்பாட்டு அறை-உதவி மையம் இயங்கி வருகிறது.

இதில் சுகாதாரத் துறை, வருவாய்த் துறை மற்றும் காவல் துறைகளைச் சோ்ந்த பணியாளா்கள் எந்நேரமும் பணியில் இருப்பா். பொதுமக்கள் இந்தக் கட்டுப்பாட்டு அறையில் உள்ள 0427-2452202, 0427-1077 என்ற எண்களில் எந்த நேரத்திலும் தொடா்பு கொண்டு தங்களுக்கான தகவல்களை பெறலாம். மேலும், தொற்று தொடா்பான சந்தேகங்களை தெரிவித்து விளக்கம் பெறலாம்.

சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறை: 0427-2452202, 1077, துணை இயக்குநா் சுகாதாரப் பணிகள் அலுவலகம்: 0427-2450022, 0427-2450498, 91541 55297 ஆகிய சிறப்பு உதவி தொலைபேசி எண்கள் செயல்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் 24 மணி நேரமும் எப்போது வேண்டுமானாலும் இந்த தொலைபேசி எண்களில் தொடா்பு கொண்டு கரோனா தொற்று குறித்த சந்தேகங்கள், மருத்துவ வசதிகளை அறிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com