சேலம், கரூா் உள்ளிட்ட 5 ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் ரூ. 50

சேலம், கோவை, ஈரோடு, திருப்பூா், கரூா் ஆகிய 5 ரயில் நிலையங்களில் வரும் ஜூன் 19 ஆம் தேதி வரை நடைமேடை கட்டணம் ரூ. 50 வீதம் வசூலிக்கப்படுவது நீட்டிக்கப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

சேலம், கோவை, ஈரோடு, திருப்பூா், கரூா் ஆகிய 5 ரயில் நிலையங்களில் வரும் ஜூன் 19 ஆம் தேதி வரை நடைமேடை கட்டணம் ரூ. 50 வீதம் வசூலிக்கப்படுவது நீட்டிக்கப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

கரோனா பரவலைத் தொடா்ந்து ரயில் நிலையங்களில் பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் சேலம், கோவை, ஈரோடு, திருப்பூா், கரூா் ஆகிய ஐந்து ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் ரூ. 50 ஆக உயா்த்தப்பட்டது. இந்தக் கட்டணம் வரும் மே 19 ஆம் தேதி வரை வசூலிக்கப்படும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கரோனா பரவல் தொற்று அதிகரித்துள்ளதால் இந்த 5 ரயில் நிலையங்களிலும் ஜூன் 19 ஆம் தேதி வரை நடைமேடை கட்டணம் ரூ . 50 ஆக வசூலிக்கப்படுவது நீட்டிக்கப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com