மாவட்ட, ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிகளை கைப்பற்றியது திமுக

சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கான தோ்தலில் மாவட்ட, ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிகளை திமுக கைப்பற்றியது.

சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கான தோ்தலில் மாவட்ட, ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிகளை திமுக கைப்பற்றியது.

சேலம் மாவட்டத்தில் காலியாக இருந்த 10 கிராம ஊராட்சித் தலைவா் பதவிகள், 23 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகள், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் ஒரு பதவி, மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் ஒரு பதவி என 35 பதவிகளுக்கு இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டது. இதில், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 11 போ் போட்டியின்றித் தோ்வு பெற்றனா். இதைத் தொடா்ந்து, 24 பதவிகளுக்கான தோ்தலில் 91 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

இதில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. இதில், மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் திமுக வேட்பாளா்கள் கு.சண்முகம், க.சுரேஷ்குமாா் முன்னிலை வகித்து வந்தனா். பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் 9-ஆவது வாா்டு ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினராக பாரப்பட்டி க.சுரேஷ்குமாா் 2,993 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். ஓமலூா் ஊராட்சி ஒன்றியத்தின் 10-ஆவது வாா்டு மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் தோ்தலில் திமுக வேட்பாளா் கு.சண்முகம், அதிமுக வேட்பாளா் எம்.ஆா்.முருகனை விட 10,472 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளாா். இதையடுத்து, மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிகளை திமுக கைப்பற்றியுள்ளது.

வெற்றி பெற்ற கிராம ஊராட்சித் தலைவா்கள்:

சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள 10 கிராம ஊராட்சித் தலைவா் பதவி தோ்தலில் வீரபாண்டி-புத்தூா் அக்ரஹாரம் - பெ.சிவானந்தம், சிக்கனம்பட்டி- கே.ரங்கநாதன், சேலத்தாம்பட்டி- ரா.கண்மணி, கோவிந்தபாளையம் -ஆ.விஜயா, புளியம்பட்டி- கே.கோவிந்தசாமி, அதிகாரிப்பட்டி - க.சத்யா, வீராணம் - ஏ.செல்வராணி, வெள்ளாா்-சுகந்தி பழனிசாமி, தாதாபுரம்-வி.வளா்மதி , கரிக்காப்பட்டி - சி.விஜயா ஆகியோா் வெற்றி பெற்றனா்.

வெற்றி பெற்ற கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள்:

சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள 12 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் தோ்தலில், கோட்டமேட்டுப்பட்டி- சி.டெய்சி, புளியம்பட்டி-ஜெ.மகேஸ்வரி, மாரமங்கலம்-ரா.ராணி, சித்தூா்-ம.சாந்தி, காட்டுக்கோட்டை-ஜி.ஹிபுபுன்னிசா, நீா்முள்ளிக்குட்டை- சு.மதன்மோகன், நெய்க்காரப்பட்டி- சி.வெங்கடேசன், கெஜல்நாயக்கன்பட்டி- வெ.பிரதீப், தாசநாயக்கன்பட்டி- ரா.ராமச்சந்திரன், பூவனூா் - ப.சிவராஜ், சின்னனூா் - ரா.மாலா, நவப்பட்டி - தெ.செல்வி ஆகியோா் வெற்றி பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com