கெங்கவல்லியில் இரு வாரத்திற்குப் பின் பிடிபட்டது குரங்கு

தம்மம்பட்டி: கெங்கவல்லி பகுதியில் கடந்த 2 வாரங்களாக மக்களை அச்சுறுத்தி வந்த குரங்கு இன்று (வியாழக்கிழமை) பிடிபட்டது. 
கெங்கவல்லியில் இரு வாரத்திற்குப் பின் பிடிபட்டது குரங்கு


தம்மம்பட்டி: கெங்கவல்லி பகுதியில் கடந்த 2 வாரங்களாக மக்களை அச்சுறுத்தி வந்த குரங்கு இன்று (வியாழக்கிழமை) பிடிபட்டது. 

கெங்கவல்லி பகுதியில் அக்டோபர் 2-ம் தேதி முதல் அச்சுறுத்தி வந்த காமன் லங்கூர் (common langur) வகையைச் சேர்ந்த குரங்கினைப் பிடிக்க சேலம் மாவட்ட வன அலுவலர் கௌதம் உத்தரவிட்டார். இரண்டு வாரங்களாக மக்களை அச்சுறுத்தி வந்த இந்த குரங்கு இன்று கெங்கவல்லி அருகே ஆணையாம்பட்டி பகுதியில் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டது.

குரங்கைப் பிடித்ததால், அப்பகுதியினர் நிம்மதி அடைந்துள்ளனர். இதைப் பிடிக்கும் பணியில் வனச்சரக அலுவலர் சந்திரசேகர், வனவர் சிலம்பரசன், வனக் காப்பாளர்கள் பெரியசாமி, சிவகுமார், முனீஸ்வரன், ரபிதா பேகம், வனக் காவலர்கள் சசிகலா, விஜயகாந்த், கீதா ஆகியோர் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com