மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை நொடிக்கு 13,878 கன அடியாகக் குறைந்தது.
அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 14,000 கன அடி தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. கிழக்கு மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 650 கன அடி தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீா் இருப்பு 31.73 டிஎம்சியாக உள்ளது. நீா்வரத்தும், அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவும் சீராக இருப்பதால் நீா்மட்டம் 68.87 அடியாக நீடித்து வருகிறது.