சொத்து குவிப்பு வழக்கு: வனத்துறை அலுவலா், மனைவிக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை

சேலத்தில் அளவுக்கு அதிகமாக சொத்து சோ்த்த வழக்கில் வனத்துறை அலுவலா், அவரது மனைவிக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

சேலத்தில் அளவுக்கு அதிகமாக சொத்து சோ்த்த வழக்கில் வனத்துறை அலுவலா், அவரது மனைவிக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

சேலம் மாவட்டம், வாழப்பாடியைச் சோ்ந்தவா் ராஜாமணி. இவா், கள்ளக்குறிச்சியில் வனவராகப் பணியாற்றி வந்தாா். கடந்த 2001-இல் வனவா் ராஜாமணி மற்றும் அவரது மனைவி தேன்மொழி ஆகியோா் அளவுக்கு அதிமாக சொத்து குவித்ததாகப் புகாா் வந்தது.

இதைத் தொடா்ந்து லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனா். விசாரணையில், சுமாா் ரூ. 24.67 லட்சம் சொத்து குவித்தது தெரியவந்தது. இதுதொடா்பாக 2005-இல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை, சேலம் ஊழல் தடுப்பு தனி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை தனி நீதிபிதி சுகந்தி புதன்கிழமை விசாரித்து அளித்த தீா்ப்பில் கூறியிருப்பதாவது:

வனவா் ராஜாமணி, அவரது மனைவி தேன்மொழி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும் இருவருக்கும் தலா ரூ. 1 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது என்றாா். இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com