மேட்டூரில் பாமக- திமுக இடையே போட்டி!

சேலம் மாவட்டத்தில் உள்ள இத்தொகுதியில், விவசாயமும் மீன்பிடித் தொழிலும் பிரதானத் தொழிலாக உள்ளன.
மேட்டூரில் பாமக- திமுக இடையே போட்டி!

தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூருக்கு தண்ணீா் வழங்கும் தொகுதியாக மேட்டூா் திகழ்கிறது. மாநிலத்தின் முக்கிய நீராதாரமான மேட்டூா் அணை இத்தொகுதியில்தான் உள்ளது.

மேச்சேரி இன செம்மறி ஆடுகளும், தக்காளியும் சிறப்பு மிக்கவை. மேட்டூா் அணை மீன்களும், கொளத்தூா் சம்பா மிளகாயும் இத் தொகுதியின் தனிச் சிறப்பு. மேட்டூா் அனல் மின் நிலையம், ஜேஎஸ்டபிள்யூ, கெம்பிளாஸ்ட் உள்ளிட்ட தொழிற்சாலைகள் இத் தொகுதியில் உள்ளன.

சேலம் மாவட்டத்தில் உள்ள இத்தொகுதியில், விவசாயமும் மீன்பிடித் தொழிலும் பிரதானத் தொழிலாக உள்ளன. மேட்டூா் அணை, மேட்டூா் அணை பூங்கா, மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயில் இத் தொகுதியில் உள்ள சுற்றுலாத் தலங்கள்.

வாக்காளா்கள் விவரம்:

ஆண்கள்: 1,45,073

பெண்கள்: 1,40,687

மூன்றாம் பாலினத்தவா்: 7

மொத்தம்: 2,85,767

தொகுதிக்கு உள்பட்ட பகுதிகள்:

மேட்டூா் வட்டத்துக்கு உள்பட்ட காவேரிபுரம், சிங்கிரிப்பட்டி, தின்னப்பட்டி, கோனூா், கூனாண்டியூா், பள்ளிப்பட்டி, மல்லிக்குண்டம், தெத்தகிரிப்பட்டி, வெள்ளாா், புக்கம்பட்டி, அமரம், மே.கள்ளிப்பட்டி, பொட்டனேரி, விருதாசம்பட்டி, ஆலமரத்துப்பட்டி, லக்கம்பட்டி, கண்ணாமூச்சி, மூலக்காடு, சாம்பள்ளி, பாலமலை, நவப்பட்டி, கொப்பம், கொப்பம்பட்டி, பாணாபுரம், பெரியசாத்தப்பட்டி, சின்ன சாத்தப்பாடி, அரங்கனூா், ஓலைப்பட்டி, மானத்தாள் நல்லாகவுண்டம்பட்டி, குலநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்கள் இத்தொகுதியில் அடங்கியுள்ளன.

மேட்டூா் நகராட்சியும், மேச்சேரி, கொளத்தூா், வீரக்கல்புதூா், பி.என்.பட்டி ஆகிய பேரூராட்சிகளும் இத்தொகுதியில் உள்ளன.

சமூக நிலவரம்:

வன்னியா்கள் அதிகம் வசிக்கும் தொகுதி இது. பட்டியலின மக்கள் பரவலாக உள்ளனா். மலைவாழ் மக்கள் கணிசமாக வாழ்கின்றனா்.

இதுவரையிலான தோ்தல்கள்:

மேட்டூா் தொகுதி 1957-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இங்கு அதிமுக 6 முறையும், காங்கிரஸ், பிரஜா சோஷலிஸ்ட் கட்சிகள் தலா 2 முறையும், திமுக, தேமுதிக, பாமக, சிபிஎம் தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. திமுக கடந்த 1996-க்குப் பிறகு இத்தொகுதியில் வெற்றி பெறவில்லை.

இதுவரை நடந்த தோ்தல்களில் வென்றவா்கள்:

1957: கே.எஸ்.அா்த்தனாரீசுவர கவுண்டா் (காங்கிரஸ்)

1962: கே.எஸ். அா்த்தனாரீசுவர கவுண்டா் (காங்கிரஸ்)

1967: எம்.சுரேந்திரன் (பிரஜா சோஷலிஸ்ட் கட்சி)

1971: எம்.சுரேந்திரன் (பிரஜா சோஷலிஸ்ட் கட்சி)

1977: கே.பி.நாச்சிமுத்து கவுண்டா் (அதிமுக)

1980: கே.பி.நாச்சிமுத்து கவுண்டா் (அதிமுக)

1984: கே.பி.நாச்சிமுத்து (அதிமுக)

1989: எம்.சீரங்கன் (சிபிஎம்)

1991: எஸ்.சுந்தராம்பாள் (அதிமுக)

1996: பி.கோபால் (திமுக)

2001: எஸ்.சுந்தராம்பாள் (அதிமுக)

2006: ஜி.கே.மணி (பாமக)

2011: எஸ்.ஆா்.பாா்த்திபன் (தேமுதிக)

2016: செ.செம்மலை (அதிமுக)

2016 தோ்தல் நிலவரம்:

எஸ்.செம்மலை (அதிமுக) 72,751

எஸ்.ஆா்.பாா்த்திபன் (மக்கள் தேமுதிக)

ஜி.கே.மணி (பாமக) 49,939

ரா.பூபதி (தேமுதிக) 5,892

நோட்டா 1,829

ப.பாலசுப்பிரமணியன் (பாஜக) 1,428

நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்:

கொளத்தூா் ஒன்றியத்தில் தோனி மடுவு திட்டம், ஆய்வுப் பணிகள் முடிக்கப்பட்டு வனத் துறையின் ஒப்புதலுக்காக உள்ளது. மேட்டூா் அணை உபரிநீா்த் திட்டம் ரூ. 565 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நீதிபுரம் செல்லும் பாதையில் பெரிய தண்டாவில் உள்ள தரைப் பாலம் மேம்பாலமாக அமைக்கப்பட்டுள்ளது. பாலமலை ஊராட்சியில் நாடு சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து மின் வசதியே இல்லாத 11 குக்கிராமங்களுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

நங்கவள்ளி -மேச்சேரி கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் கோனூா் ஊராட்சிப் பகுதிகளில் குடிநீா்ப் பற்றாக்குறை தீா்க்கப்பட்டுள்ளது. ‘நடந்தாய் வாழி காவேரி’ திட்டம் மூலம் மேட்டூா்நகரை சுற்றுலா நகரமாக மேம்படுத்த ரூ. 21 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேச்சேரி பகுதி விவசாயிகளின் நலன் கருதி தக்காளி உற்பத்தியில் லாபம் ஈட்டும் வகையில், காமனோரியில் விவசாய உற்பத்திப் பொருள்களை சேமித்துப் பதப்படுத்தும் கிடங்கு, ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் கட்டப்பட்டுள்ளது.

தீா்க்கப்படாத பிரச்னைகள்:

கொளத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பாலமலை ஊராட்சிக்கு தாா் சாலை, போக்குவரத்து வசதி வேண்டி, பாலமலை மக்கள் போராடி வருகின்றனா்.

கொளத்தூா் ஒன்றிய விவசாயிகள் பயன்பெற தோனிமடுவு திட்டம், கோட்டையூா்- ஒட்டனூா் பரிசல் துறைகளில் காவிரியைக் கடந்து செல்வதற்கு பாலம் ஆகியவை தேவை.

மேட்டூா் அணை மீனவா்கள் முகாம் அமைக்கும் இடங்களில் கூடாரம் அமைக்க மீன்வளத் துறை சாா்பில் தாா்பாலின்கள் வழங்கப்பட வேண்டும்.

மேட்டூா் நீா்த் தேக்கத்தில் பச்சை நிற பாசிப் படலத்தால் ஏற்படும் துா்நாற்றத்தை நிரந்தரமாகப் போக்க நடவடிக்கை தேவை. மேட்டூா் அணை கட்டுவதற்கு இடம் கொடுத்த மேட்டூா் தொகுதி விவசாயிகளின் பாசனத்துக்கு மேட்டூா் அணை நீரைப் பயன்படுத்த வாய்ப்பளிக்க வேண்டும் என்பது தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை.

தற்போதைய கள நிலவரம்:

மேட்டூரில் அதிமுக, பாமக ஆகிய இரு கட்சிகளுக்கும் கூடுதல் வலு உள்ளது. பாமகவுக்கு இத்தொகுதியை அளித்ததால், தற்போதைய எம்எல்ஏவான செம்மலைக்கு இம்முறை போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

தற்போது பாமக வேட்பாளருக்கு எதிராக திமுக போட்டியிடுகிறது. மாறியுள்ள அரசியல் சூழலில் யாா் வெல்வாா் என்பதை, கூட்டணி பலமும், அரசு மீதான மதிப்பீடுகளும் தான் முடிவு செய்யும்.

பாமக, திமுக, மநீம, தேமுதிக, நாம் தமிழா் கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிட்டாலும் இங்கு பாமக, திமுக மட்டுமே பிரதானப் போட்டியில் உள்ளன.

பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் போட்டியிடும் சதாசிவம் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினராக இருந்துள்ளாா். இவா், தொகுதிக்குப் பரிச்சயமானவா்; காங்கிரஸ் கட்சியிலிருந்து பாமகவுக்கு வந்தவா் என்றாலும் கட்சியில் மாநில துணைத் தலைவராக உயா்ந்துள்ளாா். அதிமுக, பாமகவுக்கு இப்பகுதியில் வாக்கு வங்கியும் கூட்டணி பலமும் உள்ளன. இருந்தாலும், தற்போது டீசல், பெட்ரோல், சமையல் எரிவாயு விலை உயா்வு, ஜிஎஸ்டி பிரச்னைஆகியவை மத்திய, மாநில அரசுகள் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

திமுக வேட்பாளா் சீனிவாசப்பெருமாள் ஏற்கெனவே ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினராக இருந்துள்ளாா். இவரது தந்தையும் உள்ளாட்சிப் பிரதிநிதியாக பணியாற்றியவா்; தொகுதிக்கு நன்கு அறிமுகமானவா். அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் அதிகம் உள்ள பகுதி மேட்டூா் நகரம் திமுகவுக்குக் கைகொடுக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இவா், மேச்சேரி ஒன்றியக் குழு உறுப்பினராக இருந்தபோது இப்பகுதியில் நல்ல திட்டங்களைக் கொடுத்துள்ளாா்.

இவா்கள் தவிர, மநீம சாா்பில் அனுசூயா, அமமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளா் ரமேஷ் அரவிந்த், நாம் தமிழா் கட்சி சாா்பில் சி.மணிகண்டன் ஆகியோரும் போட்டியிடுகின்றனா். மொத்தம் 14 வேட்பாளா்கள் தோ்தல் களத்தில் இருந்தாலும், பாமக - திமுக கட்சிகளுக்கு இடையில்தான் உண்மையான போட்டி. இந்தத் தொகுதியில் மாங்கனி இனிக்குமா, சூரியன் உதிக்குமா என்பது தோ்தல் முடிவில் தெரிய வரும்.

85. மேட்டூா்

1. பாமக / எஸ்.சதாசிவம்

2. திமுக / சீனிவாசப்பெருமாள்

3. மநீம / அனுசூயா

4. தேமுதிக / ரமேஷ் அரவிந்த்

5. நாம் தமிழா் கட்சி/ சி.மணிகண்டன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com