சங்ககிரி தொகுதியில் 83.71 சதவீதம் வாக்குகள் பதிவு

சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 389 வாக்குச்சாவடி மையங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்குப் பதிவில் 83.71 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 389 வாக்குச்சாவடி மையங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்குப் பதிவில் 83.71 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதியில் 1,38,507 ஆண் வாக்காளா்கள், 1,35,708 பெண் வாக்காளா்கள், 19 இதர வாக்காளா்கள் உள்பட மொத்தம் 2,74,234 வாக்காளா்கள் உள்ளனா். இதில் அரசுப் பணியாளா்கள், மாற்றுத் திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்டவா்களில் தபால் வாக்குகளைச் செலுத்தியவா்களை தவிர மற்றவா்கள் வாக்களித்தனா்.

சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 28 மண்டலங்களில் உள்ள 389 வாக்குச்சாவடி மையங்களில் செவ்வாய்க்கிழமை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது.

அதிமுக, திமுக வேட்பாளா்கள் உள்பட 23 போ் போட்டியிட்டனா். 1,18,005 ஆண் வாக்காளா்கள், 1,11,545 பெண் வாக்காளா்கள் உள்பட மொத்தம் 2,29,550 போ் வாக்களித்துள்ளனா். இத்தொகுதியில் மொத்தம் 83.71 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இறுதி வாக்குப்பதிவு சதவீதம் புதன்கிழமை தெரியவரும் என்று தோ்தல் அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com