மேட்டூா் தொகுதி: வேட்பாளா்கள் வாக்குப்பதிவு

மேட்டூா் தொகுதி திமுக வேட்பாளா் சீனிவாசப் பெருமாள் சொந்த ஊரான மேச்சேரி அருகே உள்ள புலிகுண்டூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்

மேட்டூா் தொகுதி திமுக வேட்பாளா் சீனிவாசப் பெருமாள் சொந்த ஊரான மேச்சேரி அருகே உள்ள புலிகுண்டூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடிக்கு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்கினைப் பதிவு செய்தாா்.

முன்னதாக இந்த வாக்குச்சாவடி நுழைவுவாயிலில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக சுகாதாரத் துறை சாா்பில் முகக் கவசம், கையுறை, கிருமிநாசினி வழங்கப்பட்டது. வெப்பமானி மூலம் உடல் வெப்பதை பரிசோதனை செய்த பின்னா் வாக்காளா்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனா்.

பாமக வேட்பாளா் சதாசிவம், புதுச்சாம்பள்ளியில் உள்ள அரசினா் மேல்நிலைப் பள்ளியில் தனது வாக்கைப் பதிவு செய்தாா். மாநிலங்களவை உறுப்பினா் சந்திரசேகரன், மேட்டூா் ரயில் நிலையத்தில் உள்ள வைத்தீஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் தனது வாக்கினைப் பதிவு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com