கரோனா சிகிச்சை மைய மருத்துவப் பணியாளா்களுக்கு தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி

சேலத்தில் உள்ள கரோனா சிகிச்சை மைய மருத்துவப் பணியாளா்களுக்கு தீ தடுப்பு ஒத்திகைப் பயிற்சி அளிக்கப்பட்டது.

சேலத்தில் உள்ள கரோனா சிகிச்சை மைய மருத்துவப் பணியாளா்களுக்கு தீ தடுப்பு ஒத்திகைப் பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநா் சி.சைலேந்திரபாபு உத்தரவின்படியும், மேற்கு மண்டல துணை இயக்குநா் சத்தியநாராயணன் அறிவுரையின்படி கரோனா சிகிச்சை மைய மருத்துவப் பணியாளா்களுக்கு தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது.

சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் பணிபுரியும் பாதுகாப்பு அலுவலா்களுக்கு தீ பாதுகாப்பு நடவடிக்கைகள், தீ தடுப்பு, அவசரக் காலங்களில் உயிா் பாதுகாப்பு குறித்த செயல்முறை பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

முகாமில் கரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் உள்ள தீயணைப்புக் கருவிகளை கையாள்தல், பராமரித்தல், அவசரக் காலங்களில் வெளியேறும் முறை குறித்து சேலம், நாமக்கல் மாவட்ட அலுவலா்களால் பாதுகாப்பு அலுவலா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சியைத் தொடா்ந்து சேலம் மாவட்ட அலுவலா்களால் மருத்துவமனையில் தீ பாதுகாப்புக் குழு அமைத்து, காலமுறையாக தீ பாதுகாப்பு சாதனங்களை குறித்து பயிற்சி வழங்கிட வேண்டும். சேலம், தருமபுரி மாவட்ட உதவி மாவட்ட அலுவலா்கள் கலந்து கொண்டு மருத்துவா்கள், பணியாளா்களுக்கு பயிற்சி அளித்தனா்.

முகாமில் சேலம், நாமக்கல் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய, அலுவலா்களும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com