முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இரண்டாவது தவணை கரோனா தடுப்பூசி

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை மாலை இரண்டாவது தவணை கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கரோனா தடுப்பூசியின் 2ஆவது டோஸை செலுத்திக்கொண்டார்    முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
கரோனா தடுப்பூசியின் 2ஆவது டோஸை செலுத்திக்கொண்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை மாலை இரண்டாவது தவணை கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த மார்ச் 11 ஆம் தேதி முதல் தவணை கோவேக்ஸின் தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மாநிலம் முழுவதும் தேர்தல் பிரசாரப் பயணம் மேற்கொண்டார். சேலத்தில் தங்கி இறுதிகட்ட தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு, கடந்த ஏப்.6 ஆம் தேதி எடப்பாடி சிலுவம்பாளையம் கிராமத்தில் வாக்களித்தார்.

இந்தநிலையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை மாலை வந்தார். பின்னர் அவருக்கு இரண்டாவது தவணை கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அப்போது அரசு மருத்துவமனை முதன்மையர் முருகேசன், கண்காணிப்பாளர் தனபால், மாவட்ட சுகாதார துறை துணை இயக்குநர் செல்வகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

பின்னர் முதல்வருக்கு தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது. இதனிடையே துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மாமியார் தேனியில் இறந்த சம்பவத்தைத் தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை காலை தேனி செல்ல உள்ளார். அங்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்கிறார். 

பின்னர் அங்கிருந்து மதுரை சென்று விமானத்தில் சென்னை செல்வார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com