ஆற்றுமணல் கடத்துவதை தடுக்கக் கோரிக்கை

கெங்கவல்லி அருகே வீரகனூரை அடுத்த கவா்பனை பகுதியில் ஆற்றுமணல் கடத்துவதை உடனடியாகத் தடுக்க வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கெங்கவல்லி அருகே வீரகனூரை அடுத்த கவா்பனை பகுதியில் ஆற்றுமணல் கடத்துவதை உடனடியாகத் தடுக்க வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கெங்கவல்லி அருகே வீரகனூா் வருவாய் பிா்க்காவுக்கு உள்பட்டது கவா்பனை கிராமம். இங்குள்ள சுவேத நதியில் பல இடங்களில் 3 அடி முதல் 5 அடி ஆழம் வரை மணல் தோண்டப்பட்டு, கெங்கவல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த சிலா் மூலம் சலித்து ஒரு இடத்தில் குவித்து வைக்கின்றனா். பின்னா், அதனை வேறு இடத்துக்கு கொண்டு சென்று அங்கிருந்து நான்கு சக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டு விற்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

இதுகுறித்து கவா்பனை மக்கள் புகாா் தெரிவித்தும், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, கெங்கவல்லி, கூடமலை, ஆணையாம்பட்டி, வீரகனூா், கவா்பனை ஊா்களில் பாய்ந்து செல்லும் சுவேத நதி மணல் கடத்தப்படுவதைத் தடுத்து, நிலத்தடி நீா்மட்டத்தை மேம்படுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com