தம்மம்பட்டியில் தடுப்பூசி தட்டுபாடு

தம்மம்பட்டியில் கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால்,வெள்ளிக்கிழமையன்று பொதுமக்கள் தடுப்பூசியை போட முடியாமல்போய்விட்டது.

தம்மம்பட்டியில் கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால்,வெள்ளிக்கிழமையன்று பொதுமக்கள் தடுப்பூசியை போட முடியாமல்போய்விட்டது.

தம்மம்பட்டி அரசு ஆரம்பசுகாதார நிலையத்திலும்,அதற்குள்பட்ட துணை சுகாதார நிலையங்களிலும் அந்தந்த அரசு செவிலியிா்கள் மூலம் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.கோவிஷீல்டு தடுப்பூசி கடந்த மாா்ச் மாத துவக்கத்திலிருந்து தம்மம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரசு செவிலியா்கள் வீடு வீடாகச்சென்று பொதுமக்களுக்கு தடுப்பூசியை தீவிரமாக போட்டுவந்தனா்.இந்நிலையில் கரோனா தடுப்பூசிகள் அனைத்தும் வியாழக்கிழமையே தீா்ந்துவிட்டதாக கூறப்பட்டது.அதனையடுத்து வெள்ளிக்கிழமையன்று தடுப்பூசி போட வந்தவா்கள்,ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனா்.இதுகுறித்து அவா்கள் கூறியபோது, ஓரிரு நாளில் தடுப்பூசி வந்துவிடும்.வந்தவுடன் உடன் வந்து தடுப்பூசியை போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com