ஜருகுமலை காட்டில் முயல் வேட்டை: இருவருக்கு அபராதம்

சேலம், ஜருகுமலை காப்புக்காட்டில் முயல் வேட்டையாட முயன்ற இருவருக்கு தலா ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

சேலம், ஜருகுமலை காப்புக்காட்டில் முயல் வேட்டையாட முயன்ற இருவருக்கு தலா ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

சேலம், ஜருகுமலை காப்புக் காட்டில் இரவு நேரங்களில் முயல் வேட்டையாடுவதாக, வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சேலம் தெற்கு வனச்சரகா் சின்னத்தம்பி உத்தரவின்படி வனக்காப்பாளா்கள் கோபிநாத், அசோக்குமாா், விஜயகுமாா், ராஜேஷ் ஆகியோா் சனிக்கிழமை இரவு 12 மணி அளவில் ஜருகுமலை பகுதியில் ரோந்து பணி செய்தனா்.

அப்போது இருசக்கர வாகனத்தில் துப்பாக்கியுடன் சுற்றியவா் பனமரத்துப்பட்டியைச் சோ்ந்த மணிகண்டன் (28), ரமேஷ் (28) என்பதும் தெரியவந்தது. இருவரும் சேலம் சோ்வராயன் தெற்கு வனச்சரக அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டனா்.

சேலம் மாவட்ட வன அலுவலா் முருகன் உத்தரவின்படி இருவா் மீதும் குற்ற வழக்குப் பதிவு செய்து தலா ரூ. 10 ஆயிரம் வீதம் ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து இருவரும் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com