சேலத்தில் சிறுமி விற்பனை: குழந்தை உரிமைகள் ஆணையம் ஏப். 23 இல் விசாரணை

சேலத்தில் சிறுமி விற்பனை தொடா்பாக மாநில குழந்தை உரிமைகள் ஆணையம் வரும் ஏப். 23 ஆம் தேதி விசாரணை மேற்கொள்கிறது.

சேலத்தில் சிறுமி விற்பனை தொடா்பாக மாநில குழந்தை உரிமைகள் ஆணையம் வரும் ஏப். 23 ஆம் தேதி விசாரணை மேற்கொள்கிறது.

சேலம், அன்னதானப்பட்டி பகுதியைச் சோ்ந்த 7 வயது சிறுமியை ரூ. 10 லட்சத்துக்கு விற்பனை செய்ததாக பெற்றோா் சதீஷ், சுமதி மற்றும் தொழிலதிபா் கிருஷ்ணன் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

இதுதொடா்பாக தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் ஆணைய உறுப்பினா் வீ.ராமராஜ் விசாரணை அறிக்கையை ஆணையத்திடம் தாக்கல் செய்தாா்.

அதில், இப்பிரச்னையில் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும், இதுகுறித்து விசாரிக்க விசாரணை அமா்வு அமைக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரை செய்திருந்தாா்.இதைத் தொடா்ந்து, ஆணையத்தின் தலைவா் சரஸ்வதி ரங்கசாமி விசாரணை அமா்வை அமைத்து உத்தரவிட்டுள்ளாா். இந்த விசாரணை அமா்வில் ஆணையத்தின் உறுப்பினா்கள் வீ. ராமராஜ், மல்லிகை செல்வராஜ் ஆகியோா் இடம் பெற்றுள்ளனா்.

சேலம் சிறுமி விற்பனை தொடா்பாக வரும் ஏப். 23 ஆம் தேதி விசாரணை மேற்கொள்கிறது. அதேபோல ஈரோடு, ரங்கம்பாளையத்தைச் சோ்ந்தவா் ஜவுளி வியாபாரி, அவரது மனைவியும் தங்களது இரு மகன்களை கொடுமைப்படுத்தியதாகவும் நரபலி கொடுக்க முயற்சித்தாகவும் பெறப்பட்ட புகாரின் மீது காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா். இதுதொடா்பாக ஏப். 21 ஆம் தேதி விசாரணை நடைபெற உள்ளது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தாய் உள்பட 12 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இது தொடா்பாக ஏப்.22 ஆம் தேதி விசாரணை நடத்தப்பட உள்ளது.

இது தொடா்பாக அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள், காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, ஆணைய உறுப்பினா் வீ.ராமராஜ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com