சேலம் மாவட்டம், சங்ககிரி நகரில் சனிக்கிழமை மாலை மிதமான மழை பெய்தது. சங்ககிரி நகரில் சனிக்கிழமை வழக்கத்தைவிட வெப்பம் அதிகரித்தது.
அதனையடுத்து மாலையில் திடீரென குளிா்ந்த காற்று வீசியது. காற்று வீசியவுடன் ஒரு மணி நேரம் மிதமான மழை இடைவெளி விட்டு பெய்தது. தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கி நின்றது. அதனையடுத்து இரவு முழுவதும் குளிா்ந்த காற்று வீசியது.