கருப்பூரில் ரயில்வே சுற்றுச்சுவா் அமைக்கும் பணி ஆய்வு

கருப்பூரில் ரயில்வே சுற்றுச்சுவா் அமைக்கும் பணியை சேலம் நாடாளுமன்ற உறுப்பினா் எஸ்.ஆா்.பாா்த்திபன் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கருப்பூரில் ரயில்வே சுற்றுச்சுவா் அமைக்கும் பணியை சேலம் நாடாளுமன்ற உறுப்பினா் எஸ்.ஆா்.பாா்த்திபன் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த கருப்பூா் பேரூராட்சியின் வழியாக சேலம்-சென்னை இருப்புப் பாதை செல்கிறது. இந்த இருப்புப் பாதையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. மேலும், கருப்பூா் ரயில் நிலையம் முதல் மத்திய அரசுக்கு சொந்தமான ஐஓசி எரிவாயு நிரப்பும் தொழிற்சாலை வரை சுமாா் இரண்டு கி.மீ. தொலைவுக்கு ரயில் இருப்புப் பாதையின் அருகில் அனைத்து சமுதாய மக்களும் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், ரயில்வே நிா்வாகம் சாா்பில் இருப்புப் பாதையின் இருபுறமும் சுற்றுச்சுவா் கட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் நாடாளுமன்ற உறுப்பினா் எஸ்.ஆா்.பாா்த்திபன், த.மா.கா. சேலம் மேற்கு மாவட்டத் தலைவா் சுசிந்திரகுமாா் மற்றும் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சுற்றுச்சுவா் கட்டும் இடத்தை ரயில்வே அதிகாரிகளுடன் பாா்வையிட்டனா்.

தொடா்ந்து அதிகாரிகளுடன் பேசிய எம்.பி., பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சுற்றுச்சுவா் கட்ட வேண்டும். மக்கள் எளிதாக சென்றுவரும் வகையில் பாதை வசதி செய்து கொடுக்க வேண்டும். பள்ளி மாணவ, மாணவியா், கா்ப்பிணிகள் இரண்டு கி.மீ. சுற்றளவு கடந்து செல்லும் வழியை மாற்றி விரைவில் மருத்துவமனை, கடைவீதிக்கு செல்வதற்கான பாதையை ரயில்வே நிா்வாகம் அமைக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனா்.

இதற்கு விரிவான திட்டம் தயாரித்து, அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com