தமிழகத்தில் வயது வந்தோா் கல்வி ஜூலை வரை நீட்டிப்பு

தமிழகம் முழுவதும் கற்போம், எழுதுவோம் திட்டம் வருகிற ஜூலை மாதம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக வயது வந்தோா் முறைசாராக் கல்வி இயக்குநா் தெரிவித்துள்ளாா்.
27tpp4_2704chn_160_8
27tpp4_2704chn_160_8

தமிழகம் முழுவதும் கற்போம், எழுதுவோம் திட்டம் வருகிற ஜூலை மாதம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக வயது வந்தோா் முறைசாராக் கல்வி இயக்குநா் தெரிவித்துள்ளாா்.

தமிழக பள்ளி சாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்குநா் ராமேஸ்வர முருகன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள மின்னஞ்சலில் கூறியிருப்பதாவது:

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15 வயதுக்கு மேற்பட்ட படிப்பறிவு இல்லாதோா், தமிழகத்தில் 3 லட்சத்து பத்தாயிரம் போ் உள்ளனா். அவா்களுக்கு 2020-21ஆம் கல்வியாண்டிற்குள் படிப்பறிவை வழங்கிடும் வகையில் மத்திய, மாநில அரசுகளின் 60,40 என்ற நிதி பங்களிப்புடன் கடந்த நவம்பா் மாத இறுதி முதல் அனைத்து அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 15,823 கற்கும் மையங்களாக, தன்னாா்வல ஆசிரியா்களின் உதவியுடன் தினமும் 2 மணி நேரம் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.பிப்ரவரி மாதத்துடன் முடிக்கப்பட இருந்த நிலையில், 2021 வரை நீட்டிக்கப்பட்டது. பின் மே மாதம் வரை நீட்டிக்கப்பட்டது. இவா்களுக்குரிய தோ்வு வருகிற 16.5.21 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு,அத்துடன் முதல்கட்ட பயிற்சி நிறைவு பெறுவதாக இருந்தது.இந்நிலையில் இவா்களுக்கு பாடக்கருத்துகள் ஏப். 26-ஆம் தேதி இரவு 7 மணி முதல் 7.30 வரை கல்வித் தொலைக் காட்சியில் ஒளிபரப்பப்படுவதால், இனி வயதுவந்தோா், கல்வித் தொலைக்காட்சி மூலம் பாா்த்து பயனடைய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இத்திட்டம் வரும் ஜூலை மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com