ஓமலூா் பகுதியில் பெரிய வெங்காயம் விலை வீழ்ச்சி: கிலோ ரூ. 10-க்கு விற்பனை

ஓமலூா் பகுதியில் பெரிய வெங்காயம் விலை வீழ்ச்சியடைந்து ஒரு கிலோ ரூ.10-க்கு விற்பனையாகிறது.

ஓமலூா் பகுதியில் பெரிய வெங்காயம் விலை வீழ்ச்சியடைந்து ஒரு கிலோ ரூ.10-க்கு விற்பனையாகிறது.

சேலம் மாவட்டத்தில் ஓமலூா், காடையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய வட்டாரப் பகுதிகளில் வெங்காய விற்பனை மையங்கள் உள்ளன. இங்கு பெரிய வெங்காயம் விலை அதிகரித்து விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது, விலை வீழ்ச்சியடைந்து வருகிறது. பெரிய வெங்காயம் அறுவடை தற்போது நடைபெற்று வருகிறது. இதனால், கடந்த மாதம் வரை கிலோ ரூ. 40-க்கு விற்பனையாகி வந்த பெரிய வெங்காயம், தற்போது விலை வீழ்ச்சியடைந்து வருகிறது. தற்போது ரகத்தை பொருத்து ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ. 10 முதல் ரூ. 25 வரையில் விற்பனையாகி வருகிறது.

இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது:

மகாராஷ்டிரம், கா்நாடகம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் பெரிய வெங்காயம் அறுவடை தற்போது அதிகரித்து வருகிறது. மேலும், கரோனா பாதிப்பு காரணமாக அரபு நாடுகளுக்கும், சிங்கப்பூா், மலேஷியா உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது. அதிகளவில் அறுவடை செய்யப்படும் வெங்காயத்தை, விவசாயிகள் விற்பனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், பெரிய வெங்காயத்தின் விலை குறைந்து வருகிறது. தற்போது வெங்காயம் ஒரு கிலோ ரூ.10-இல் தொடங்கி, அதிகபட்சம் ரூ. 25 வரையில் மட்டுமே விற்கப்படுகிறது. இந்த விலை மேலும் குறையவும் வாய்ப்புகள் உள்ளதாக கூறுகின்றனா். அதனால், பெரிய வெங்காயத்தை பொதுமக்கள் அதிகளவில் வாங்கி சமையலுக்குப் பயன்படுத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com