கரோனா தடுப்பு களப் பணியாளா்களின் பணி குறித்து ஆய்வு

சேலம், சூரமங்கலம் மண்டலத்தில் கரோனா தடுப்பு களப் பணியாளா்களின் பணிகளை மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சேலம், சூரமங்கலம் மண்டலத்தில் கரோனா தடுப்பு களப் பணியாளா்களின் பணிகளை மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கரோனா நோய் தொற்றுப் பரவலைத் தடுத்திடும் வகையில் மூன்று நபா்களுக்கு மேல் நோய்த் தொற்று பாதிக்கப்பட்ட 79 பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் அப்பகுதிகளில் முழு அளவில் சுகாதாரப் பணிகளும், தேவையான சிகிச்சை, பாதுகாப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தடை செய்யப்பட்ட பகுதிகளில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக ஒவ்வொரு மண்டலத்திற்கும் 170 களப் பணியாளா்கள் வீதம் மொத்தம் 680 களப் பணியாளா்கள் நியமிக்கப்பட்டு, தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இரண்டு களப் பணியாளா்களை கொண்ட குழுவினா் தடை செய்யப்பட்ட பகுதிகள், அருகில் உள்ள 300 வீடுகளுக்குக் சென்று கரோனா தொற்று அறிகுறிகள் யாருக்கெனும் உள்ளதா என்பதைக் கண்டறிந்து, அறிகுறி உள்ளவா்களுக்கு சளி தடவல் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனா்.

சூரமங்கலம் பகுதியில் பணியாற்றும் களப்பணியாளா்களின் பணியை புதன்கிழமை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன், முன்களப் பணியாளா்களாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடியாகப் பணியாற்றும் பணியாளா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் குடியிருப்பவா்கள் அனைவருடைய முழு உடல் பரிசோதனை விவரங்களையும் முழுமையாகப் பதிவு செய்து கண்காணித்து வர வேண்டும் என கேட்டு கொண்டாா்.

பின்னா் அஸ்தம்பட்டி மண்டலம், கோவிந்தக்கவுண்டா் தோட்டம் பகுதியில் நடைபெற்ற காய்ச்சல் கண்டறியும் முகாம், சளி தடவல் பரிசோதனை முகாமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

சேலம் கோட்டை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாநகராட்சிப் பணியாளா்களுக்கு நடைபெற்ற சளி தடவல் பரிசோதனை முகாமில் 189 பணியாளா்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் மொத்தம் 1,965 பேருக்கு சளி தடவல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.விதிமுறைகளைப் பின்பற்றாமல் அதிக பயணிகளை ஏற்றி வந்த இரு தனியாா் பேருந்துகளுக்கும், ஐந்து சாலைப் பகுதியிலுள்ள தனியாா் வணிக வளாகத்திற்கும் தலா ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது.

மாநகராட்சி அலுவலா்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் விதிமுறைகளை மீறிச் செயல்பட்ட 66 தனி நபா்களுக்கு தலா ரூ. 200 வீதமும், 34 சிறு வணிக நிறுவனங்களுக்கு தலா ரூ. 500 வீதமும் மொத்தம் ரூ. 50,200 அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com