சங்ககிரியில் மரக்கன்றுகள் நடும் விழா
By DIN | Published On : 10th August 2021 02:22 PM | Last Updated : 10th August 2021 02:22 PM | அ+அ அ- |

பசுமை சங்ககிரி அமைப்பு, தண்ணீர் தண்ணீர் அமைப்பு அறக்கட்டளையின் சார்பில் வடுகப்பட்டி மாதிரி பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை மரக்கன்றுகளை நட்டு வைக்கும் நிர்வாகிகள்.
சேலம் மாவட்டம், சங்ககிரி தண்ணீர் தண்ணீர் அமைப்பு அறக்கட்டளை, பசுமை சங்ககிரி அமைப்புகளின் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சங்ககிரி தண்ணீர் தண்ணீர் அமைப்பு அறக்கட்டளை, பசுமை சங்ககிரி அமைப்புகளின் சார்பில் சங்ககிரி நகரின் முன்னாள் சமூக ஆர்வலர் எஸ்டிஎஸ்.கனகராஜ் 3ம் ஆண்டு நினைவு தினத்தினையொட்டி நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் சங்ககிரியை அடுத்த வடுகப்பட்டி மாதிரி பள்ளி வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 10க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். தண்ணீர் தண்ணீர் அமைப்பு அறக்கட்டளைத் தலைவர் இந்நிழச்சிக்கு கே.சண்முகம் தலைமை வகித்தார். சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்க இணைச் செயலர் சின்னதம்பி, ஓம்ராம் அறக்கட்டளைத்தலைவர் பா.சுந்தரவடிவேல், பசுமை சங்ககிரி அமைப்பின் நிறுவனர் மரம் பழனிசாமி, நிர்வாகிகள் பசுமை சீனிவாசன், பசுமை கனகராஜ், தண்ணீர் தண்ணீர் அமைப்பு அறக்கட்டளை துணைத்தலைவர் பொன்.பழனியப்பன், செயலர் கிருஷ்ணமூர்த்தி, நிர்வாகிகள் கிஷோர்பாபு உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.