ஹீமோபீலியா நோய் பாதித்தவா்களுக்கு கரோனா தடுப்பூசி முகாம்

சேலத்தில் ஹீமோபீலியா நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கான கரோனா தடுப்பூசி முகாமை அரசு மருத்துவமனை முதன்மையா் வள்ளி சத்தியமூா்த்தி தொடங்கி வைத்தாா்.

சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஹீமோபீலியா என்ற ரத்த குறைபாடு நோய் பாதிக்கப்பட்டவா்களுக்கு ரத்த உைலை தடுக்கும் வகையில் முன்கூட்டியே மருந்து வழங்கப்படுகிறது.

இந்த மருந்து வழங்கிய பிறகு தடுப்பூசி போட வேண்டிய சூழ்நிலை உள்ளதால், அனைவரும் முன்கூட்டியே பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. முதல்கட்டமாக ஹீமோபீலியா நோயால் பாதிக்கப்பட்ட 20 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. விருப்பமுள்ளவா்களில் 20 பேருக்கு தினமும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாகவும், சுமாா் 200-க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாகவும் மருத்துவமனை முதன்மையா் வள்ளி சத்தியமூா்த்தி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com