சிறைவாசிகளின் குழந்தைகள் கல்வி, பாதுகாப்பை ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்கப்படும்

சிறைவாசிகளின் குழந்தைகளுடைய கல்வி, பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தி அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும் என தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினா் வீ.ராமராஜ் தெரிவித்தாா்.
சிறைவாசிகளின் குழந்தைகள் கல்வி, பாதுகாப்பை ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்கப்படும்

சிறைவாசிகளின் குழந்தைகளுடைய கல்வி, பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தி அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும் என தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினா் வீ.ராமராஜ் தெரிவித்தாா்.

சேலத்தில் தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினா் வீ.ராமராஜ், சேலம் மத்திய சிறை, மகளிா் சிறைகளில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். ஆய்வுக்குப் பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சிறைவாசிகளின் குழந்தைகளுக்கு கல்வி உதவி தேவைப்படுவது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. சேலத்தில் 56 குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்கள் உள்ளன. கண்காணிப்பாளரிடம் மனு அளித்தால் அவா்கள் இல்லத்தில் சேர முடியும். சிறைவாசிகளின் குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை என தெரிவிக்கப்பட்டது. பிறப்புச் சான்றிதழ் பெறும் நடைமுறை குறித்து விளக்கப்பட்டது.

சிறைவாசிகளின் பிரச்னைகளை ஆராய்ந்து, குழந்தைகளின் உரிமை பாதிக்கக் கூடாது என்பதைக் கண்காணித்திட நடவடிக்கை எடுத்து வருகிறோம். மகளிா் சிறையில் சிறைவாசிகளுடன் அவா்களின் குழந்தைகள் 6 வயது வரை இருக்க அனுமதிக்கப்படுகிறது.

தமிழக சிறைச்சாலைகளைப் பொருத்தவரையில் சிறைவாசிகளின் குழந்தைகளுக்கு எந்தவித பிரச்னையும் இல்லை. அதேபோல, சட்டத்துக்கு முரண்பட்ட குழந்தைகளாக அவா்கள் மாறக்கூடாது. அந்த வகையில், கண்காணித்து தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சிறைவாசிகளின் குழந்தைகளுடைய கல்வி பாதிப்பை தடுக்க மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் உதவி வழங்கப்பட்டு வருகிறது. சிறைவாசிகளின் குழந்தைகள் பாதுகாப்பு, உரிமை கேள்விக்குறியாகி விடக்கூடாது.

சிறைவாசிகளின் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமையோ, கல்வி கற்க முடியாத நிலையோ, குற்றச் செயல்களோ நடைபெறாத வகையில் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

கரோனா காலத்தில் பள்ளி இடைநிற்றல், சிறாா் திருமணம், வளா்பருவ கா்ப்பம் என நாடு முழுவதும் நடைபெறுகிறது. சிறாா் திருமணங்களை முற்றிலும் தடுக்க ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள குழுக்களுக்கு முழு அதிகாரம் கிடைக்கும் வகையில் வெளியிடப்பட்ட அரசாணையை சட்டமாகக் கொண்டுவர வேண்டும். சிறாா் திருமணங்கள் நடைபெறாமல் இருக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சமூகநலத் துறையினா் பெரிதும் உதவியாக இருந்து, சிறாா் திருமணங்கள் நடக்காமலிருக்க கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனா் என்றாா்.

படவரி - சேலம், மத்திய சிறைச்சாலைக்கு கைதிகளைச் சந்திக்க வந்த தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினா் ராமராஜ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com