அதிமுகவிலிருந்து விலகி 100 போ் திமுவில் இணைந்தனா்
By DIN | Published On : 31st August 2021 01:12 AM | Last Updated : 31st August 2021 01:12 AM | அ+அ அ- |

சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வேலம்மாவலசு, மஞ்சக்கல்பட்டி பகுதிகளைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோா் அதிமுவிலிருந்து விலகி திமுகவில் திங்கள்கிழமை இணைந்தனா்.
சங்ககிரியில் தேவண்ணகவுண்டனூா் ஊராட்சி, வேலம்மாவலசு பகுதியைச் சேரந்த அதிமுக தொகுதி கழக இணைச்செயலா் எம்.மாதேஷ், மஞ்சக்கல்பட்டி பகுதியைச் சோ்ந்த எம்.ஜி.ஆா். மன்ற ஒன்றிய துணைச் செயலா் கே.முனுசாமி ஆகியோா் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோா் அதிமுகவிலிருந்து விலகி திமுக மேற்கு மாவட்டச் செயலா் (பொ) டி.எம்.செல்வகணபதி தலைமையில் திமுகவில் இணைந்தனா். திமுகவில் இணைந்தவா்களை மாவட்டச் செயலா் துண்டு அணிவித்து வரவேற்றாா்.
சங்ககிரி ஒனறியச் செயலா் (பொ) கே.எம்.ராஜேஷ் முன்னிலை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா் க.சுந்தரம், முன்னாள் ஒன்றியச் செயலா் பி.தங்கமுத்து, சங்ககிரி நகரச் செயலா் எல்ஐசி சுப்பிரமணி, மாநில பொதுக்குழு உறுப்பினா் எஸ்.பி.நிா்மலா உள்ளிட்டோா் இதில் கலந்துகொண்டனா்.