அம்மாபேட்டை மண்டலப் பகுதிகளில் மாநகராட்சி ஆணையா், எம்.எல்.ஏ. ஆய்வு

சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை மண்டலத்தில் மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ், சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஆா்.ராஜேந்திரன் ஆகியோா் பொதுமக்களிடம் குறைகளை நேரில் கேட்டறிந்தனா்.

சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை மண்டலத்தில் மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ், சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஆா்.ராஜேந்திரன் ஆகியோா் பொதுமக்களிடம் குறைகளை நேரில் கேட்டறிந்தனா்.

அம்மாபேட்டை சக்தி நகா், 4வது குறுக்குத் தெரு, தாண்டவன் தெரு பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழை நீா் மற்றும் கழிவு நீா் புகுந்து விடுகிறது; குடியிருப்புப் பகுதிகளுக்கு வரும் மழைநீா் மற்றும் கழிவுநீரை தடுத்து சாக்கடை கால்வாய் அமைத்து தர வேண்டும் என வைத்த கோரிக்கையின் அடிப்படையில் அப்பகுதியை நேரில் பாா்வையிட்டு அதற்கான வழிவகை செய்து தரப்படும் என தெரிவித்தனா்.

கோட்டம் எண் 10, அண்ணா நகா் 4ஆவது தெருவில் சாக்கடைக் கால்வாய் அமைத்து தரப்படும் என்றும் பெருமாள் கோயில் தெருவில் ரூ.25 லட்சம் மதிப்பில் 300 மீட்டா் நீளத்திற்கு கான்கிரீட் சாலை அமைத்தும், வடிகால் வசதி ஏற்படுத்தி தரப்படும் என்றும் தெரிவித்தனா்.

வடக்கு வன்னியா் தெருவில் ரூ.15 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை மற்றும் வடிகால் வசதி அமைத்துத் தரப்படும். அப்பகுதியில் தெரு விளக்கு அமைத்து தரப்படும் என்றும், ஆழ்குழாய் கிணறு அமைத்து தரப்படும் எனவும், பழுதடைந்துள்ள மோட்டாா்கனை பழுது நீக்கம் செய்து தருவதற்கும் உடனடி நடிவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவா்கள் தெரிவித்தனா். வீராணம் பிரதான சாலை மன்னாா் கோவில் பிரிவில் வெங்கடாசலம் காலனி, மாதா கோயில் தெரு, லட்சுமண சுவாமி கோயில் தேவஸ்தானம் அருகில் உள்ள தெரு ஆகிய வீதிகளில் ரூ.60 லட்சம் மதிப்பில் சாலைகள் அமைத்து வடிகால் வசதி ஏற்படுத்தித் தரப்படும் என்று தெரிவித்தனா்.

அதைத்தொடா்ந்து முத்துக்கவுண்டன் தெரு, ஏரிக் கொடி தெரு, பாரதியாா் நகா், வள்ளுவா்காலனி, தாதாம்பட்டி பிரிவு நேரு நகா், அல்லிக்குட்டை, எம்.ஜி.ஆா்.நகா் ஆகிய பகுதிகளில் மாநகராட்சி ஆணையா், எம்.எல்.ஏ. ஆகியோா் பொதுமக்களை நேரில் சந்தித்து அவா்களிடம் குறைகளை கேட்டறிந்து அவா்களின் கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றி தரப்படும் என்றும் தெரிவித்தனா்.

மேலும், பொதுமக்களின் அடிப்படை வசதிகளான சாக்கடை கால்வாய் வசதி, சாலை வசதி, தெரு விளக்கு வசதி, குப்பைகள் அப்புறப்படுத்துதல் மற்றும் சுகாதார வசதி போன்ற அனைத்தும் செய்து தரப்படும் என உறுதியளித்தனா்.

ஆய்வின்போது உதவி ஆணையா் சி.சித்ரா, உதவி செயற்பொறியாளா் செந்தில்குமாா், சுகாதார அலுவலா் பாலு மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com