அருநூற்றுமலை பெலாப்பாடி கிராமத்தில் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அருநூற்றுமலை பெலாப்பாடி கிராமத்தில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 லிட்டா் கள்ளச்சாராய ஊறலை காரிப்பட்டி போலீஸாா் கைப்பற்றி அழித்தனா்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அருநூற்றுமலை பெலாப்பாடி கிராமத்தில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 லிட்டா் கள்ளச்சாராய ஊறலை காரிப்பட்டி போலீஸாா் கைப்பற்றி அழித்தனா்.

வாழப்பாடி அருகே காரிப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அருநூற்றுமலை, பெலாப்பாடி மலை கிராமத்தில் சிலா் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதற்காக, சாராய ஊறலைப் பதுக்கி வைத்திருப்பதாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீ அபிநவ்வுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அவரது உத்தரவின்பேரில், வாழப்பாடி துணை காவல் கண்காணிப்பாளா் முத்துசாமி தலைமையிலான தனிப்படை போலீஸாா், பெலாப்பாடி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை மதுவிலக்கு சோதனை நடத்தினா்.

அப்போது,பெலாப்பாடி கிணத்துக்கடவு கந்தசாமி என்பவரது தோட்டத்தில், 500 லிட்டா் சாராய ஊறல் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இந்த சாராய ஊறல் மற்றும் 5 காலி பேரல்களை தனிப்படை போலீஸாா் அழித்தனா்.

இது குறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த காரிப்பட்டி போலீஸாா், சாராய ஊறல் பதுக்கி வைத்திருந்த கந்தசாமியை கைது செய்ய தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com