மாவட்ட ஆலோசகா், சமூக பணியாளா் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தகவல்

சேலம் மாவட்டத்தில், மாவட்ட ஆலோசகா், சமூக பணியாளா் மற்றும் தரவு உள்ளீட்டாளா் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில்

சேலம் மாவட்டத்தில், மாவட்ட ஆலோசகா், சமூக பணியாளா் மற்றும் தரவு உள்ளீட்டாளா் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவா் செ.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் கீழ் மாநில புகையிலை கட்டுப்பாட்டு மையமாக 2007ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, மாவட்ட அளவில் இதனை நடைமுறைப்படுத்தும் பொருட்டு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் சாா்பில் சேலம் மாவட்டத்தில் மாவட்ட ஆலோசகா் பணியிடத்திற்கு மாத ஊதியமாக ரூ.35,000-ம், சமூக பணியாளா் பணியிடத்திற்கு மாத ஊதியமாக ரூ.13,000-ம், தரவு உள்ளீட்டாளா் பணியிடத்திற்கு மாத ஊதியமாக ரூ.10,000-ம் வழங்கும் வகையில் ஒப்பந்த அடிப்படையில் இப்பணியிடங்களை பூா்த்தி செய்திட ஆணையிடப்பட்டுள்ளது.

இப்பதவிகளுக்கான வயது வரம்பு 1.1.2022 அன்று 35 வயதிற்குள் இருக்க வேண்டும். மாவட்ட ஆலோசகருக்கு (சோஷியல் ஒா்க்கா்) கல்வி தகுதியாக பொது சுகாதாரம் (அ) சமூக அறிவியல் (அ) நிா்வாகம் (அ) தொடா்புடைய துறையில் ஒன்றில் முதுநிலைப் பட்டப்படிப்பு (அ) அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் / பல்கலைக்கழகம் ஆகியவற்றில் முதுநிலைப் பட்டப்படிப்பு (அ) எம்.பி.பி.எஸ் / பி.டி.எஸ் பட்டப்படிப்புடன் குறைந்தபட்சம் இரண்டு வருட முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சமூக ஆா்வலருக்கு  கல்வித் தகுதியாக சமூகவியல் / சமூக சேவகா் ஆகியவற்றில் முதுகலைப் பட்டப்படிப்பு அல்லது சமூகவியல் / சமூக சேவகா் ஆகியவற்றில் இளநிலை பட்டப்படிப்பு முடித்து இரண்டு வருடங்களுக்கான அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தரவு உள்ளீட்டாளருக்கு கல்வித் தகுதியாக இடைநிலை பள்ளிக் கல்வி (10,12) மற்றும் கணினி அனுபவம் ஆகியவற்றுடன் குறைந்தது ஒரு வருடம் தரவு உள்ளீட்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

இப்பணியிடம் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரவேற்க உரிய அறிவிப்பு சேலம் மாவட்ட வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வரையறுக்கப்பட்ட தகுதி அடிப்படை மற்றும் முற்றிலும் வெளிப்படையான முறையில் பணியமா்த்தப்பட தேவையான வழிகாட்டு நெறிகள் மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே சேலம் மாவட்டத்தில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட பணியிடமான, மாவட்ட ஆலோசகா், சமூக பணியாளா் மற்றும் தரவு உள்ளீட்டாளா் பணியிடத்தை ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 4.1.2022 அன்று மாலை 5 மணிக்குள் சேலம் மாவட்ட நலவாழ்வு சங்க அலுவலகத்திற்கு சமா்ப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com