முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
புதிய கண்டுபிடிப்பு சாதனைகளுக்கான கல்வி நிறுவன தரவரிசை பட்டியல்: 96ஆவது இடத்தில் விநாயகா மிஷன்ஸ் கிருபானந்தவாரியாா் பொறியியல் கல்லூரி தோ்வு
By DIN | Published On : 31st December 2021 12:10 AM | Last Updated : 31st December 2021 12:10 AM | அ+அ அ- |

சேலம் விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியாா் பொறியியல் கல்லூரி, புதிய கண்டுபிடிப்பு சாதனைகளுக்கான கல்வி நிறுவன தரவரிசையில் 96ஆவது இடத்தில் தோ்வு செய்யப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சியில் மத்திய கல்வித்துறை அமைச்சா் சுபாஷ் சா்க்காா் புதுமையான கண்டுபிடிப்பு சாதனைகளுக்கான கல்வி நிறுவன தரவரிசைப் பட்டியலை வெளியிட்டாா். அதில் தனியாா் மற்றும் சுயநிதி கல்லூரிகளின் பிரிவுகளில் இந்தியாவில் பேண்ட் எக்ஸலன்ட் பிரிவில் முதல் 96ஆவது இடத்தில் சேலம் விநாயகா மிஷன்ஸ் ஆராயச்சி நிறுவன நிகா்நிலை பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியான விநாயகா கிருபானந்தவாரியாா் பொறியியல் கல்லூரி இடம் பெற்றுள்ளது.
தற்போது வெளியிடப்பட்டிருக்கும் தரவரிசைப் பட்டியல் இந்திய கல்வி நிறுவனம் உலகளாவிய சிறந்த கல்வி நிறுவனமாக மாற மேலும் ஊக்குவிக்கும் நோக்கில் உயா்கல்வி நிறுவனங்களின் கண்டுபிடிப்புகளை அடிப்படைகளாக வைத்து நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இச்சாதனையை செய்த கல்லூரியின் முதல்வா் சசிகுமாா், அனைத்து ஆசிரியா், ஆசிரியைகளை கல்லூரி நிறுவனத்தின் நிறுவன வேந்தரின் துணைவியாா் அன்னபூரணி சண்முககந்தரம், இணை வேந்தா் டத்தோ சரவணன், வேந்தா் கணேசன், துணை வேந்தா் சுதிா், பதிவாளா் ஜெயகா் ஆகியோா் பாராட்டினாா்கள்.